தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண், ஒரு ஆண் என 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களில் 5க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

நேருக்கு நேர் மோதிய பேருந்து

Updated On: 

24 Nov 2025 12:54 PM

 IST

தென்காசி, நவம்பர் 24: தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசிமதுரை சாலையில் அச்சம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!

காயமடைந்தவர்களை மீட்ட கிராமத்தினர்:

bro

தொடர்ந்து, காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறன்றனர். இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடக்கவே, அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உதவியுள்ளனர். மேலும், உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸூக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை உயரும் அபாயம்:

உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் தொண்ட நிறுவன ஊழியர்களும் விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று வருகின்றனர். அதோடு, காயடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

கனமழையால் சாலைகள் துண்டிப்பு:

ஏற்கெனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் கூட துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வது என்பதே சற்று கடினமான காரியமாகியுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இதனிடையே, விபத்து குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் தென்காசி அரசு மருத்துவமைனயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. வெடிக்கும் அபாயம் அதிகம்!!
இனி ஹோட்டல், மால், அலுவலங்களிலும் ஆதார் கட்டாயம்.. புதிய விதிமுறைகள்!!
மலையாள பிக் பாஸ் சீசன் 7.. டிஆர்பி-யில் புதிய சாதனை..
TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?