Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து ஓட்டுநரின் திடீர் மரணம்: நடத்துநரின் துடிப்பான செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

Driver Dies of Heart Attack in Palani: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநர் பிரபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நடத்துனர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பேருந்து ஓட்டுநரின் திடீர் மரணம்: நடத்துநரின் துடிப்பான செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு..!
நடத்துநரின் துடிப்பான செயலால் பெரும் விபத்து தவிர்ப்புImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 23 May 2025 16:27 PM

பழனி மே 23: திண்டுக்கல் மாவட்டம் பழனி (Palani, Dindigul District) அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பிரபுவுக்கு (Prabhu Driver) திடீரென மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டது. ஓட்டுநர் மயங்கி விழுந்ததையடுத்து, பக்கத்தில் இருந்த நடத்துநர் (Conductor) சாமர்த்தியமாக செயல்பட்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அவரது செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பெரிய விபத்திலிருந்து தப்பினர். பின்னர் பிரபுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை (Palani police have registered a case and are investigating) நடத்தி வருகின்றனர்.

பழனி அருகே நடந்த பரிதாப சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரு தனியார் பேருந்தில் நடந்த பரிதாபமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை கிராமத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் பிரபுவிற்கு, கணக்கம்பட்டி அருகே சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மாரடைப்பால் ஓட்டும் நிலையிலேயே மயங்கி விழுந்த ஓட்டுநர்

மாரடைப்பால் அவர் ஓட்டும் நிலையிலேயே மயங்கி விழுந்தார். இந்த நிலையிலும், பக்கத்தில் இருந்த நடத்துநர் விஷயத்தை கவனித்து உடனடியாக செயல்பட்டு, தன்னுடைய கைகளால் பிரேக்கை அழுத்தி பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அவருடைய இந்த துடிப்பான செயல் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரின் உயிரையும் காப்பாற்றியது.

ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தகவல்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநர் பிரபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் திடீர் மரணம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாரடைப்பு அறிகுறிகள் தெரிய வந்தவுடன் செய்ய வேண்டியவை

  • உடனடியாக அவசர மருத்துவ உதவி அழைக்கவும் – 108 என்ற எமர்ஜென்சி எண்களில் அழைக்க வேண்டும்.
  • நபரை அமைதியாக அமரவோ அல்லது படுக்கவோ செய்யவும் – அதிக அசைவுகள் மரண அபாயத்தை அதிகரிக்கலாம்.
  • மூச்சுத்திணறல் இருந்தால், நபரை சற்று முன்னோக்கி சாய்வாக வைத்துக் கொண்டு மூச்சு விட வசதியாகச் செய்யவும்.
  • மருத்துவ உதவி வரும் வரை CPR (மனித உடல் நெஞ்சை அழுத்தும் செயல்) தெரிந்திருந்தால் செய்யலாம்.
  • நெஞ்சின் நடுவில் இரு கைகளாலும் திடீரென, ஒரு நிமிடத்திற்கு 100–120 முறை அழுத்த வேண்டும்.
  • நபர் உணர்விழந்தால் மற்றும் மூச்சுவிடாமல் இருந்தால், உடனடியாக CPR தொடங்க வேண்டும்.
  • மருந்து இருந்தால் (அஸ்பிரின் போன்றவை), மருத்துவரின் ஆலோசனையுடன் கொடுக்கலாம்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!...
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!...
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.....
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்...
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!...
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!...
நாவல் கொட்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
நாவல் கொட்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?...
கோடை வெப்பத்தில் தண்ணீர் தொட்டி சூடாவதை தடுக்கும் 6 எளிய வழிகள்!
கோடை வெப்பத்தில் தண்ணீர் தொட்டி சூடாவதை தடுக்கும் 6 எளிய வழிகள்!...