பெண் குழந்தைக்கு தந்தையான சீமான் – குவியும் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு மே 21, 2026 அன்று 2வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை, மே 21 : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு மே 21, 2026 அன்று 2வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பல்வேறு கட்சியினர், திரை பிரபலங்கள், நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பெண் குழந்தைக்கு தந்தையான சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆக்ரோஷமான பேச்சுக்கள் மூலம் தனக்கென ஒரு பெரும் அரசியல் செல்வாக்கை பெற்றிருக்கிறார். கட்சி தொடங்கியதில் இருந்தே அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார். இவருக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 7 பட்டியலின அமைச்சர்கள்.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்!
இந்த நிலையில் தான் சீமான் – கயல்விழி தம்பதிக்கு மே 21, 2026 அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் நாதக தொண்டர்கள் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வாழ்த்து
பெண் குழந்தை என்பது வரம். வாழ்க்கையில் நம்மை தாங்கிக்கொள்ள கிடைத்திருக்கும் மற்றொரு தாய். தமிழ் இனத்தின் மகனுக்கு மகள்.. பிறந்த அன்பின் மருமகள் எல்லோரின் அன்பையும் பெற்று வளரட்டும். வாழ்த்துகள்.@Seeman4TN pic.twitter.com/GFCQiNOdEC
— sureshkamatchi (@sureshkamatchi) May 21, 2026
இது தொடர்பாக மாநாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பெண் குழந்தை என்பது வரம். வாழ்க்கையில் நம்மை தாங்கிக்கொள்ள கிடைத்திருக்கும் மற்றொரு தாய். தமிழ் இனத்தின் மகனுக்கு மகள்.. பிறந்த அன்பின் மருமகள் எல்லோரின் அன்பையும் பெற்று வளரட்டும். வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகன்றனர்.
இதையும் படிக்க : மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை.. சத்யபாமாவுக்கும் வாய்ப்பில்லை!
அடிப்படையில் இயக்குநரான சீமான் பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து இனியவளே வீர நடை போன்ற படங்களை இயக்கியுள்ளார். மாதவன் நடிப்பில் தம்பி மற்றும் வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் தொடங்கி கடைசியாக வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.