6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்.. கால நீடிப்பு கிடையாது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்..
SIR Form Distribution: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மொத்தம் 12 கட்சிகள் பங்கேற்றன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா பட்ட்நாயக், தமிழ்நாட்டில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 24, 2025: தமிழகத்தில் தற்போது வரை 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவம்பர் 4ஆம் தேதி இந்த பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன. சரியாக ஒரு மாத காலம் வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 7, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் பிப்ரவரி 9, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்:
ஆனால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த பணிகளை மேற்கொல்வதற்கு இது சரியான நேரமல்ல என்றும், அவசரகதியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், படிவங்களை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு பெரும் குழப்பங்கள் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பணிகள் தமிழகத்தில் ஒரு மாத காலம் மட்டுமே நடைபெறும்; கால நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!!
6.16 கோடி பேருக்கு வழங்கப்பட்ட படிவங்கள்:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மொத்தம் 12 கட்சிகள் பங்கேற்றன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா பட்ட்நாயக், தமிழ்நாட்டில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
SIR பணிகள் கால நீடிப்பு கிடையாது – அர்ச்சனா பட்நாயக்:
இதுவரை வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில், படிவங்களை தருவதற்கான கால நீட்டிப்பு கிடையாது. அதாவது, இந்த நடைமுறையில் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் வாய்ப்பு இல்லை. எஸ்.ஐ.ஆர். பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் இதுவரை வழங்கப்படவில்லை. வாக்காளர்கள் முடிந்தவரை படிவங்களை சரியாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், எஸ்.ஐ.ஆர். படிவத்திலும் நிச்சயம் பெயர் இருக்கும். படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டால், அதற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் 320 வாக்காளர் நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வழங்குவதாக கூறுவது முற்றிலும் தவறானது. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர், தமிழகத்தில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.