Firecracker Factory Explosion: சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?

Sivakasi Cracker Factory: விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Firecracker Factory Explosion: சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?

வெடி விபத்து நிகழும் காட்சி

Updated On: 

11 Oct 2025 18:37 PM

 IST

தீபாவளி (Diwali) முழுவதும் வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் (Sivakasi Cracker Factory) பெரும் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும், வெடிகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் அருகே செல்ல முடியாத சூழல் நிலவி வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை:

இன்று அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைந்திருக்கலாம் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் பெரும் பங்கை உற்பத்தி செய்யும் சிவகாசியில், இதற்கு முன்பும் இதுபோன்ற பல விபத்துகள் நடந்துள்ளன.