இளைஞர் அஜித் குமார் தீவிரவாதியா? ஏன் அடிச்சீங்க? மதுரை கிளை சரமாரி கேள்வி!

Sivaganga Custody Death : சிவகங்கையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன் எனவும், கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.

இளைஞர் அஜித் குமார் தீவிரவாதியா? ஏன் அடிச்சீங்க? மதுரை கிளை சரமாரி கேள்வி!

உயிரிழந்த இளைஞர்

Updated On: 

01 Jul 2025 05:53 AM

 IST

மதுரை, ஜூன் 30 : சிவகங்கை மாவட்டம் அருகே காவல்நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் (Sivaganga Custody Death) என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது மாநிலத்தையே உலுக்கியது.   இந்த  வழக்கு தொடர்பான விசாரணை மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞர் அஜித் குமார் என்ன தீவிரவாதியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தூக்கிச் சென்று அடித்து கொலை செய்துள்ளீர்கள் எனவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிகிதா (41). இவர் தனத தாயுடன் 2025 ஜூன் 27ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்திருக்கிறார். பின்னர், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித் குமுர் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்து வேண்டும் என நிகிதா கூறியிருக்கிறார். அதற்கு அஜித் குமார் தனக்கு கார் ஓட்ட தெரியாத என கூறி வேறு ஒருவரை காரை இயக்கி சொல்லி ஓரமாக நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இளைஞர் மரணம்

இதற்கிடையில், சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வந்த நிகிதா தனது காரில் வைத்திருந்த 9 சவரன் நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து, மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், அஜித் குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, அஜித் குமாரை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. போலீசார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அஜித் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, ஏற்பட்ட மரணம் தொடர்பாக பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அஜித் குமாரிடம்ன் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்படை காவலர்கள் பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன், ஆனந்த் ஆகீய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டட இளைஞர் உயிரிழந்தது மாநிலத்தை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இளைஞர் அஜித் குமார் தீவிரவாதியா?

குறிப்பாக, ஆளும் திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், மரியா கிழா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காவல்துறையை சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதாவது, ”கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அவர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம். அவ்வாறின்றி ஒரு சாதாரண சந்தேக வழக்கில் அவரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை”  என நீதிபதிகள் கூறனர். அதோடு, இளைஞர் அஜித் குமார் ஏன் தாக்கினீர்கள்  என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும், விசாரணைக்கு எடுப்பதாகவும்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.