மக்கள் நலனுக்காக தான் – ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் வாயு அடிப்படையிலான தகன மண்டபம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகன மண்டபம் சமூக நலனுக்கே பயன்படும் என்றும், பொதுநலனுக்கு எதிரானது அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஷா யோகாவிற்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை, ஜனவரி 28 : ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் வாயு அடிப்படையிலான தகன மண்டபம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகன மண்டபம் சமூக நலனுக்கே பயன்படும் என்றும், பொதுநலனுக்கு எதிரானது அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகள் 1999-ன் படி, குடியிருப்புகள் அல்லது குடிநீர் ஆதாரங்களிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் தகன மண்டபம் அமைக்கக்கூடாது என்பது முழுமையான தடை இல்லை என்றும், முக்கிய நிபந்தனை கிராம பஞ்சாயத்திடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளது என்றும் விளக்கமளித்தனர்.
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான மனு தள்ளுபடி
உரிய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தகன மண்டபம் அமைப்பது சட்டவிரோதமாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வாயு அடிப்படையிலான தகன மண்டபம் சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் நவீன வசதியாக இருப்பதால், இது சமூகத்திற்கு பயனளிக்கும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு, ஈஷா அறக்கட்டளைக்கு தகன மண்டபம் அமைக்க அனுமதி வழங்கிய இக்கரை பொலுவம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர், ஊரக பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சார்ந்ததாகும்.
மனுதாரர்கள், விதி 7-ன் படி 90 மீட்டர் தடை விதியை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ஜெகதீஸ்வரி எதிர் பி. பாபு நாயுடு வழக்கில் உயர் நீதிமன்ற முழு அமர்வு வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, சட்டப்படி அனுமதி பெற்ற புதிய இடங்களில் தகன மண்டபம் அமைக்க எந்த தடையும் இல்லை என விளக்கினர். அனைத்து வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தகன மண்டபம் அமைப்பதற்கான அனுமதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை எனத் தீர்ப்பளித்தது.