திருமலா பால் மேலாளர் கொலையா? விசாரணை வளையில் துணை ஆணையர்.. பின்னணி என்ன?
Tirumala Manager Death Case : சென்னையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரண வழக்கு தொடர்பாக கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும், நவீன் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய பாண்டியராஜன் திடீர் விடுப்பு எடுத்துள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, நவீன் மரணத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

உயிரிழந்த நபர்
சென்னை, ஜூலை 11 : திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் (Tirumala Manager Death Case) தற்கொலை வழக்கில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது, நவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதற்கு பின்னணியில் துணை காவல் ஆணையர் பாண்டியராஜன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பஞ்சலால் (37). இவர் புழலில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நவீன் ரூ.45 கோடி பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில், அவர் தனது விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலா பால் மேலாளார் மரண வழக்கு
இவர் தற்கொலை செய்து கொள்வதற்க முன்பு, பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதில், கையாடல் செய்த ரூ.5 கோடியை நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டேன் எனவும், எனது தற்கொலைக்கு இரண்டு பேரே காரணம் என கூறியிருக்கிறார். மேலும், கையாடல் பணத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்கவில்லை என்றால் சிறையில் இருப்பாய் என நரேஷ் மற்றும் முகுந்த் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : ரூ.45 கோடி மோசடி புகார்.. திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை: வெளியான தகவல்கள்!
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பிரவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், நவீன் தற்கொலை செய்து கொண்டாரா கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இதுபற்றி போலீசார் முழு தகவலை வெளியிடவில்லை.
விசாரணை வளையில் துணை ஆணையர்
நவினின் உடல் மீட்கப்பட்டபோது, அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கொளத்தூர் துணை ணையர் பாண்டியராஜன் திடீர் விடுப்பு எடுத்துள்ளது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
Also Read : 3 மாதங்களில் கசந்த திருமண வாழ்க்கை.. ரயில்வே சுரங்கப்பாதையின் மீது இருந்து குதித்து உயிரை விட்ட நபர்!
தற்போது, பாண்டியராஜனிடம் விசாரணையும் நடந்து வருகிறது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும். இதற்கிடையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், நவீன் மரண வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வலியுறுத்தி உள்ளனர்.