திருமணமான ஒரு மாதம்.. மனைவி, தாயை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. பகீர் பின்னணி!
Villupuram Crime News : விழுப்புரத்தில் குடும்ப தகராறில் மூன்று பேரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் மனைவி, தாய் மற்றும் உறவினரை இளைஞர் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. மூன்று பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிகிறது.

மாதிரிப்படம்
விழுப்புரம், ஜூலை 12 : விழுப்புரம் மாவட்டத்தில் மனைவி, தாய் உள்பட மூன்று பேரை ரவுடி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளது தெரியவந்தது. இதில் மூன்று பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. நகைக்காக கொலை செய்யப்படுவது ஒருபக்கம் இருந்தாலும், குடும்ப தகராறில் பெண்கள், குழந்கைள் கொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் சம்பவங்கள தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்த்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, குடும்ப தகராறில் மூன்று பேர் ரவடி துப்பாக்கில் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் பயங்கரம்
அதாவது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தென்னரசு (28). இவர் ரவுடி போன்று இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் பிரபல ரவுடிகளுடன் வலம் வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு 2025 ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணுடம் இவருக்கு திருமணம் நடந்தது. தென்னரசுவுடன் அவரது தாய் மற்றும் மனைவி என மூன்று பேரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு, தென்னரசு அதிகளவு போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.
Also Read : கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!
இதனால், மனைவி மற்றும் தாயார் தென்னரசுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால், 2025 ஜூலை 11ஆம் தேதியான நேற்று இரவு தென்னரசுவுக்கு, தாய் மற்றும் மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரம் அடைந்த தென்னரசு, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து மனைவி மீதும், தாய் மீது சுட்டுள்ளார்.
3 பேரை சுட்ட இளைஞர்
இருவர் மீது குண்டு பாய்ந்தது. அதனால், வலி தாங்க முடியாமல் இருவர் கத்தியுள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்தில் இருந்த அவரது உறவினர் கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரையும் தென்னரசு சுட்டுள்ளார்.
Also Read : ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!
இதில் மூன்று பேரும் பலத்த காயங்களுடன் இருந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று பேரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், தென்னரசுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.