திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்

Thiruparankundram Issue: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவும், அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யவும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளையைச் சேர்ந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு டிசம்பர் 5, 2025 அன்று நிராகரித்தது.

திருப்பரங்குன்றம் விவகாரம்... அரசின் மனுவில் மறைமுக நோக்கம்.... நிராகரித்த நீதிமன்றம்

மாதிரி புகைப்படம்

Published: 

04 Dec 2025 17:22 PM

 IST

மதுரை, டிசம்பர் 4: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவும், அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யவும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்ற மதுரை (Madurai) கிளையைச் சேர்ந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு டிசம்பர் 5, 2025 அன்று நிராகரித்தது. மேலும், நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தத் தவறியுள்ளது, உத்தரவினை செயல்படுத்தாததற்கான காரணம் ஏதும் நியாயமானதாக இல்லை. மேலும் அரசின் மனு மறைமுக நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது என கடுமையாக விமர்சித்தனர்.

மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற கோரிக்கை

மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் சுப்புிரமணிய சுவாமி மலையில் பழமையான தீபத் தூண் உள்ளதால், கார்த்திகை தீபம் அங்கேயே ஏற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலையின்மேல் சென்று ஆய்வு செய்து, பழைய தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிக்க :  இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த நிலையில் சட்ட மற்றும் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி தீபத் தூணில் தீபம் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மலையின் உச்சியில் தீபத்தூணிற்கு அருகே 50 மீட்டர் முஸ்லிம்கள் வழிபடும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இதனைக் காரணம் காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதனை மீறி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற முயன்றனர். இதனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் பகுதியில் திடீரென 144 தடை விதிக்கப்பட்டது. இதனால் பாஜக மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அரசின் மேல்முறையீட்டு மனு

நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய அரசு தாக்கல் செய்த மனுவில், அரசு தரப்பு முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது: அந்த மனுவில், நீதிபதியின் உத்தரவு திருப்பரங்குன்றத்தில் சமூக ஒற்றுமையையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும். இது தொடர்பாக எங்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பும் தரப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. மேலும், இந்து சமய அறநிலையத் துறையும், 100 ஆண்டுகளாக தீபத் தூண் பயன்பாட்டில் இல்லை என்று நீதிபதியும் மனுதாரரும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். அப்படியிருக்க, வழக்கு நிலுவையில் உள்ள போதே உடனடி தீபம் ஏற்ற உத்தரவு எப்படி அமல்படுத்தப்படும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை – பரபரப்பான திருப்பரங்குன்றம் – 144 தடை உத்தரவு அமல்

இரு தரப்பின் வாதங்களையும் கேட்டபின், டிசம்பர் 4, 2025 அன்று மாலை 4 மணியளவில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. அதில், போலீசார் பாதுகாப்பு வழங்கத் தவறியதால் சிஐஎஸ்எஃப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவிலும் எந்த வித மீறலும் இல்லை. அரசு தனது கடமையை செய்யவில்லை மேலும், நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தத் தவறியுள்ளது.” அரசின் மேல்முறையீட்டு மனு, தனிப்பட்ட நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்று கடுமையாக குறிப்பிட்டு, அரசின் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தது.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி