Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் தன் வேலை.. அண்ணாமலை பேச்சு!

BJP Leader Annamalai Recent Speech | பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தான் சுதந்திரமாக பேச தொடங்குவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் என்ன பேசியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் தன் வேலை.. அண்ணாமலை பேச்சு!
மேடையில் பேசிய அண்ணாமலை
vinalin-sweety
Vinalin Sweety | Published: 12 Apr 2025 17:35 PM

சென்னை, ஏப்ரல் 12 : நான் இனி சுதந்திரமாக பேச ஆரம்பிப்பேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை இனி சிக்ஸ் அடிப்பது மட்டும் தான் என் வேலை, இனி நயினார் டிஃபன்ஸ் ஆடுவார் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலையில் இந்த பேச்சு அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாஜக புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலையை மாற்றம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 10, 2025 அன்று தமிழக பாஜக தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 2025 அன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், ஏப்ரல் 12, 2025 அன்று தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்தை விதிகளின் படி, நயினார் நாகேந்திரனை 10 பேர் பரிந்துரை செய்திருந்தனர். எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாததாலும், 10 பேரின் பரிந்துரையுடன் மனுதாக்கல் செய்த நிலையில், ஒருமனதாக நயினார் நாகேந்திரன் பாஜகவின் புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 12, 2025) நயினார் நாகேந்திரனை தலைவராக அறிவிக்கு பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை

இந்த நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை நான் இனி சுதந்திரமாக பேச ஆரம்பிப்பேன் என்று இனி அண்ணாமலையாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை எப்போதும் ஓரு அரசியல்வாதிக்கு தேவை. இனி சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் தன் வேலை என்றும் இனி நயினார் டிஃபன்ஸ் ஆடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவரின் இந்த பேச்சு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காமாட்சி அம்மன் கோயிலுக்கு போறீங்களா? - இதெல்லாம் செய்யுங்க!
காமாட்சி அம்மன் கோயிலுக்கு போறீங்களா? - இதெல்லாம் செய்யுங்க!...
இலங்கையில் ரசிகர் செய்த செயல்... ஷாக்கான சந்தோஷ் நாராயணன்
இலங்கையில் ரசிகர் செய்த செயல்... ஷாக்கான சந்தோஷ் நாராயணன்...
ஆளுநர் அதிகாரங்கள்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு கேள்வி!
ஆளுநர் அதிகாரங்கள்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு கேள்வி!...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்.. ராணுவம் அதிரடி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்.. ராணுவம் அதிரடி...
கழிப்பறை இருக்கை வெடிக்க காரணம் இதுதான்.. உஷாராக இருங்கள்!
கழிப்பறை இருக்கை வெடிக்க காரணம் இதுதான்.. உஷாராக இருங்கள்!...
நான் பார்த்த முதல் தமிழ் படமே அவருடையதுதான்- சமந்தா!
நான் பார்த்த முதல் தமிழ் படமே அவருடையதுதான்- சமந்தா!...
குஷி படத்தில் விஜய் செய்த தரமான சம்பவம் - எஸ்.ஜே. சூர்யா!
குஷி படத்தில் விஜய் செய்த தரமான சம்பவம் - எஸ்.ஜே. சூர்யா!...
திருமணத்தை மீறிய உறவால் 3 பேர் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
திருமணத்தை மீறிய உறவால் 3 பேர் கொலை - அதிர்ச்சி சம்பவம்!...
"விஜய் எதிரி கிடையாது” ஓப்பனாக சொன்ன தேமுதிக!
துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்!
துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்!...