Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி..

Minister Ponmudi Apology for His Controversial Speech | பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி..
அமைச்சர் பொன்முடி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 12 Apr 2025 16:16 PM

சென்னை, ஏப்ரல் 12 : தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்கள் குறித்து இழிவாக பேசியதை அடுத்து கட்சியின் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக மன்னிப்பு கோரி அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கை என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் குறித்து பொது மேடையில் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக பெண்கள் குறித்து அவதூராக பேசிய விவகாரங்களில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி பயணம் என விமர்சித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வகுத்து வந்த பொன்முடியை பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலி உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த நடவடிகை வரவேற்பை பெற்றது.

பொன்முடியை பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர்

மனிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், நீண்ட காலம் பொது வாழ்வில் உள்ள தனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து தான் மிகவும் வருந்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்ச தீபம் ஏற்று வழிபட்டால் இவ்வளவு நன்மையா? - வழிமுறைகள் இதோ!
மோட்ச தீபம் ஏற்று வழிபட்டால் இவ்வளவு நன்மையா? - வழிமுறைகள் இதோ!...
சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?
சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?...
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்...
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்...
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!...
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்...
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!...
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!...
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்...
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!...
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!...