சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை தான்!
2025ம் ஆண்டு சந்திரனின் சாதகமான நிலை மேஷம், ரிஷபம், கடகம், துலாம் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு செல்வ வளர்ச்சி, உடல் நலம், தொழில் வளர்ச்சி போன்ற பல நன்மைகளைத் தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரனின் அருளால் இவர்களின் ஆசைகள் நிறைவேறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரங்கள் தனி மனித வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. 12 ராசிகள் மற்றும் 9 கிரகங்களின் செயல்பாடு தான் இவற்றிற்கு அடிப்படை காரணமாகும். இப்படியான நிலையில் ஒரு ராசியில் ராஜயோகம் ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு சந்திர பகவான் தான் காரணமாக அமைவார். மனத்தில் இருக்கும் ஆசைகள் நிறைவேறவும், வாழ்க்கையானது எந்த ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் தொடரவும் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் வலிமை பெற்றிருக்க வேண்டும் என சொல்லப்படுவது உண்டு. சில ராசிகளில் சந்திரன் இயற்கையாகவே அசாதாரண வலிமையைக் கொண்டிருக்கும். அப்படியான பட்சத்தில் சந்திரனின் நட்பு ராசியான மேஷம், உச்ச ராசியான ரிஷபம், பூர்வீக ராசியான கடகம், குருவின் ஸ்தானமான துலாம் மற்றும் தனுசு ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திர பகவான் ஏதோ ஒரு வகையில் செல்வத்தை ஈட்டித் தருவார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்திரன் இந்த ராசியினர் பெறும் பலன்களை காணலாம்.
- மேஷம்: இந்த ராசிக்கான அதிபதியான செவ்வாய், சந்திரனின் இணக்கமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் அளிக்கிறார். சந்திரன் செவ்வாய் ராசியுடன் இணையும் போதெல்லாம், செல்வம் பெருகும் வாய்ப்பு அமையும். வருமானம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். 2025 ஆண்டு முழுவதும் இந்த ராசிக்கு சந்திரன் சாதகமாக இருப்பதால், வேலையில் பதவி உயர்வுகளும், வெளிநாட்டு யோகங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் மிகவும் மங்களகரமான ராசியாக காட்சி கொடுக்கிறார். இதனால் நீங்கள் உயர்ந்த நிலைக்கு வரும் காலம் கனியும். சந்திரனின் ஆசிர்வாதத்தால், இந்த ராசியில் பிறந்தவர்களின் வருமானம் ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். நீங்கள் குடியிருக்கும் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். சந்திரனுக்கும் மருத்துவக் குணம் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் நோய்களுக்கு தீர்வு பெறுவார்கள். அவர்களின் மனதில் உள்ள முக்கியமான ஆசைகளும் நம்பிக்கைகளும் நிறைவேறும்.
- கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பூர்வீகம் என்பது மிகப்பெரிய சாதகமாகும். இந்த கிரகம் 2025 ஆண்டில் ராசியினரை பல வழிகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. வருமானம் பல வழிகளில் பெருகும். உடல்நலம் பெரிதும் மேம்படும். தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். சிறிது முயற்சி செய்தால் மனதில் உள்ள பெரும்பாலான ஆசைகள் நிறைவேறும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும் தொழில், வேலை, வியாபாரத்தில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும்.
- துலாம்: சந்திரனுக்குப் பிடித்த ராசிகளில் துலாமுக்கு எப்போதும் முதலிடம் தான். எவ்வளவு சாதகமாக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் பல நன்மைகளை வழங்கியுள்ளார். துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் செல்வாக்கும் முக்கியத்துவமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகையான தொழில் செய்தாலும் எப்போதும் முன்னேற்றம் பெறுவீர்கள். பிரபலங்களுடன் தொடர்பு உண்டாகும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள்.
- தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரனின் ஆட்சியாளரான வியாழனுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் சந்திரன் இந்த ராசியை பல வழிகளில் மேம்படுத்துகிறார். இதன்மூலம் குறைந்த முயற்சியுடன் வருமானம் மற்றும் அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 2025 ஆண்டு முழுவதும் சந்திரனின் அனுகூலத்தால் சாதாரண மனிதர் கூட செல்வந்தராகும் வாய்ப்பு அமையும். வேலையில்லாதவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல பொருளாதார பின்னணி கொண்ட ஒருவருடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- மீனம்: இந்த ராசிக்கு குரு பகவானும் அதிபதியாக உள்ளார். அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பாதகமான விளைவுகள் இருந்தபோதிலும், அந்தந்த துறைகளில் பெரும் உயரம் பெறுவார்கள். அந்த அளவுக்கு திறமையுடன் செயல்படுவார்கள். இந்த ராசிக்காரர்களின் ஆசைகளும் நம்பிக்கைகளும் பெரும்பாலும் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கனவு நனவாகும். உயர் பதவியில் உள்ள ஒருவருடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குழந்தை பேறு தொடர்பான செய்திகள் வந்து சேரும். உங்கள் காதல் முயற்சிகளில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இந்த கட்டுரையானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)