Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : குஷி படத்தில் நடிக்கும்போது விஜய் செய்த சம்பவம்.. போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

SJ Suryah : தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்காத கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது முன்னணி நாயகனாக இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் தற்போது படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் குஷி படத்தில் நடிக்கும்போது விஜய் செய்த தரமான சம்பவம் பற்றிக் கூறியுள்ளார்.

Cinema Rewind : குஷி படத்தில் நடிக்கும்போது விஜய் செய்த சம்பவம்.. போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!
எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 May 2025 09:27 AM

கோலிவுட் சினிமாவில் முன்னணி வில்லனாகக் கலக்கி வருபவர் எஸ். ஜே. சூர்யா (SJ, Suryah). இவர் ஆரம்பத்தில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத ரோல்களில் நடித்து சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து படங்களில் உதவி இயக்குநராகவும் (Assistant Director) பணியாற்றத் தொடங்கினார். இதை அடுத்தாக இவரின் இயக்கத்தில் வெளியான முதல் படம் வாலி (Vaalee) . தனது முதல் படத்தையே நடிகர் அஜித் குமாரை (Ajith Kumar) வைத்து இயக்கினார். இந்த படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜய்யின் (Thalapathy Vijay)  நடிப்பில் இவர் இயக்கிய முதல் படம் குஷி (Kushi).

கடந்த 2000ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். முட்டிலும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் வெளியான இந்த படமானது மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. காதல் படமாக வெளியான இந்த படமானது இன்று வரையிலும் மக்கள் மத்தியில் பிரபலமான படமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் செய்த தரமான சம்பவம் பற்றி ஓபனாக கூறியுள்ளார். விஜய் குஷி படத்தின் செட்டில் நடனமாடும்போது தனது நண்பர்களுடன் பேசிய விஷயம் பற்றி ஓபனாக கூறியுள்ளார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா சொன்ன சம்பவம் :

முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகரும், இயக்குநருமான எஸ். ஜே. சூர்யா “குஷி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நடிகர் விஜய் சார் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியாகப் சென்று பேசுவார். இது ஒரு முறை அல்ல பல முறை நடந்தது. அப்படி யாரிடம் என்னதான் பேசுவாரா என்று நானா ஒருமுறை விஜய் சாருகே தெரியாமல் ஒட்டுக்கேட்டேன். அப்போது விஜய் சார் தனது நபர் ஒருவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார், அப்போது நான் அவர் பேசியதை கேட்டேன்.

அதில் அவர் நடிகர் விஜய் தனது நபரிடம் “டேய் நான் ஷில்பா ஷெட்டியுடன் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறேன் டா” என்று கூறியிருந்தார். அதைக் கேட்டவுடன் எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று எஸ்.ஜே. சூர்யா கூறினார். இந்த விஷமானது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நேர்காணலுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நடிகர் விஜய்யும் அதே நிகழ்ச்சியில் பேசியிருந்தார், அவர் அதில் அப்போது நான் பேசும்போது ஒட்டுக்கேட்டிருக்கிறீர்கள் என்று சிரிப்புடன் பேசியிருந்தார். இது தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.