நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சர்ரென குறைஞ்சிடுஞ்சு.. செக் பண்ணுங்க!
Gold Price Cut Down on May 15, 2025 | தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (மே 15, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 15 : சென்னையில் இன்று (மே 15, 2025) ஒரே நாளில் தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சவரன் ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.8,610 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது, இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை
- மே 6, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,100-க்கும் ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 7, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,075-க்கும் ஒரு சவரன் ரூ.72,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 8, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,130-க்கும் ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 9, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,015-க்கும் ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 10, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,045-க்கும் ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 11, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.9,045-க்கும் ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 12, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.8,750-க்கும் ஒரு சவரன் ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 13, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.8,855-க்கும் ஒரு சவரன் ரூ.70,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 14, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.8,805-க்கும் ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- மே 15, 2025 – 22 காரட் ஒரு தங்கம் ஒரு கிராம் ரூ.8,610-க்கும் ஒரு சவரன் ரூ.68,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் ரூ.1,560 குறைந்த தங்கம் விலை
நேற்று (மே 14, 2025) 22 காரட் ஒரு கிராம் ரூ.8,805-க்கும் ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மே 15, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.8,610-க்கும், ஒரு சவரன ரூ.1,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே சென்ற நிலையில், தங்கம் விலை விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து வருவது சாமானியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.