Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபல நகைக் கடையில் 5.4 கிலோ போலி தங்க நகைகள் பறிமுதல்!

Fake Gold Jewelries Seized in Cuddalore | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், போலி தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் உள்ள பிரபல நகைக் கடையில் சுமார் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகைக் கடையில் 5.4 கிலோ போலி தங்க நகைகள் பறிமுதல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 12 Apr 2025 19:55 PM

கடலூர், ஏப்ரல் 12 : கடலூரில் (Cuddalore) பிரபல நகைக் கடையில் சுமார் 5.4 கிலோ எடை கொண்ட போலி தங்க நகைகள் (Fake Gold Jewelry) பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் உயர்வை அடைந்து வருகிறது. இதன் காரணமாக போலி தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கடலூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் போலி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த கடையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து உயரும் விலையால் அதிகரிக்கும் போலி தங்கம் விற்பனை

தமிழகத்தை பொருத்தவரை பொதுமக்களின் பிரதான சேமிப்புகளில் தங்கம் முதன்மை வகிக்கிறது. நிலத்தில் முதலீடு செய்வது, சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது என பல வாய்ப்புகள் இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கத்தையே முதன்மை முதலீடாக கருதப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியா அளவில் அதிகம் தங்கம் பயன்படுத்தும் மாநிலமாக தங்கம் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை தங்கம் சேமிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமன்றி, கலாச்சாரத்துடனும் தங்கம் ஒன்றினைந்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் எந்த ஒரு சுப காரியங்களை தொடங்க வேண்டும் என்றாலும் அதில் ஒரு குண்டு மணி அளவாவது பொதுமக்கள் தங்கத்தை பயன்படுத்துவர். குழந்தை பிறப்பது முதல் திருமணம் வரை அனைத்து நிகழ்வுகளுக்கு தங்கத்தை பரிசாக அளிப்பர். தங்கம் இத்தகைய முதன்மை பொருளாக இருந்தாலும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து வரும் கவலை ஒருபுறம் இருக்க விலை உயர்வால் போலி தங்கம் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

பிரபல நகைக் கடையில் கிலோ கணக்கில் போலி தங்க நகைகள் பறிமுதல்

தமிழகத்தில் போலி தங்க விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கடலூரில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வள்ளி விலாஸ் தங்க நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகைக் கடையில் போலியாக ஹால்மார்க் (Hallmark) முத்திரையிடப்பட்ட நகைகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கடைக்கு சென்ற அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹச்.யு.ஐ.டி என்னும் 6 இலக்க எண் இல்லாமல் போலி ஹார்ல்மார் முத்திரை பொறிக்கப்பட்டு தங்க நகைகளை விற்பனை செய்யப்பட்டு வந்ததை உறுதி செய்துள்ளனர். அதன்படி சுமார் 4.80 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அதிகாரங்கள்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு கேள்வி!
ஆளுநர் அதிகாரங்கள்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு கேள்வி!...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்.. ராணுவம் அதிரடி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்.. ராணுவம் அதிரடி...
கழிப்பறை இருக்கை வெடிக்க காரணம் இதுதான்.. உஷாராக இருங்கள்!
கழிப்பறை இருக்கை வெடிக்க காரணம் இதுதான்.. உஷாராக இருங்கள்!...
நான் பார்த்த முதல் தமிழ் படமே அவருடையதுதான்- சமந்தா!
நான் பார்த்த முதல் தமிழ் படமே அவருடையதுதான்- சமந்தா!...
குஷி படத்தில் விஜய் செய்த தரமான சம்பவம் - எஸ்.ஜே. சூர்யா!
குஷி படத்தில் விஜய் செய்த தரமான சம்பவம் - எஸ்.ஜே. சூர்யா!...
திருமணத்தை மீறிய உறவால் 3 பேர் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
திருமணத்தை மீறிய உறவால் 3 பேர் கொலை - அதிர்ச்சி சம்பவம்!...
"விஜய் எதிரி கிடையாது” ஓப்பனாக சொன்ன தேமுதிக!
துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்!
துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்!...
சென்னையில் 19 புறநகர் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே!
சென்னையில் 19 புறநகர் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே!...
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ரவுடி.. சுட்டுப் பிடித்த போலீஸ்!
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ரவுடி.. சுட்டுப் பிடித்த போலீஸ்!...