காலையிலேயே பரபரப்பு.. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்.. ராணுவம் அதிரடி!
Jammu Kashmir Encounter : ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாலையிலேயே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது . இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர், மே 15 : ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 3 பேர் பயங்கரவாதிகள் (kashmir encounter) சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாலையிலேயே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது . இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த மூன்று பயங்கரவாதிகளும் ஆசிப் அகமது ஷேக், அமீர் நசீர் வானி மற்றும் யாவர் அகமது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்
கடந்த வாரம் மூன்று நாட்களுக்கு இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடந்தது.
மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்த நிலையில், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும, பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், ராணுவத்தினர் காஷ்மீர் மற்றும் எல்லை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 2025 மே 15ஆம் தேதியான இன்று காலை முதலே காஷ்மீர்ன் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை கடந்த இரண்டு மணி நேரமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும், பலர் அப்பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
ராணுவம் அதிரடி
#Encounter has started at Nader, Tral area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2025
இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் துணை மாவட்டமான அவந்திபோராவின் நாடர் மற்றும் டிரால் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 48 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த இரண்டாவது தாக்குதல் ஆகும். முன்னதாக, 2025 மே 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.