பாகிஸ்தான் ஆதரவு எதிரொலி.. துருக்கி மற்றும் அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்!
Indians Boycotts Turkey and Azerbaijan Tourism | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் இந்த இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

சென்னை, மே 15 : உலக அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளங்களான துருக்கி (Turkey) மற்றும் அஜர்பைஜானுக்கு (Azerbaijan) சுற்றுலா செல்வதை இந்திய சுற்றுலா பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) விவகாரத்தில் இந்த இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியர்கள் இந்த இரண்டு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே வெடித்த மோதல்
ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து. இந்த நிலையில், மே 10, 2025 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கி மற்றும் அஜர்பைஜான்
“Indians strongly boycotted Turkey and Azerbaijan due to their open support for Pakistan.
I fully support this decision.
₹500 crore in foreign exchange that would have been spent in these two countries can now be redirected to friendly countries.”
– Subhas Goyal, ICC Member pic.twitter.com/ngzJ67n6G7
— News Arena India (@NewsArenaIndia) May 14, 2025
இந்த விவகாரத்தில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அஜர்பைஜான் மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.
இவ்வாறு இந்த இரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் நிலையில், இந்தியா சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு செல்வதற்கான முன்பதிவுகள் சுமார் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேபோல இந்த இரண்டு நாடுகளுக்கும் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவது 250 சதவீதம் வரை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.