Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேப்டன் ஸ்டைல் வேறு, விஜய் ஸ்டைல் வேறு.. கூட்டணி குறித்து சூசகமாக சொன்ன விஜய பிரபாகரன்..

DMDK Alliance Talks: விஜய பிரபாகரன், கடந்த காலங்களில் நடந்தது பற்றி யோசிக்காமல் தற்போது இருக்கக்கூடிய நிலைப்பாடு என்ன என்பதை யோசித்து திமுகவுடன் கூட்டணி அமைப்பதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கேப்டன் ஸ்டைல் வேறு, விஜய் ஸ்டைல் வேறு.. கூட்டணி குறித்து சூசகமாக சொன்ன விஜய பிரபாகரன்..
விஜய பிரபாகரன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 07:31 AM

விஜய பிரபாகரன்: தேமுதிகவிற்கு நிகர் தேமுதிக தான் எனவும் விஜயகாந்தின் ஸ்டைல் வேறு நடிகர் விஜயின் ஸ்டைல் வேறு என தேமுதிக மறைந்த முன்னாள் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகள் பிரதானமாக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த கட்சிகளுக்கிடையே தான் போட்டியானது நிலவி வருகிறது.

தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தற்போது வரை கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வியூகங்களும் வெளியாகி வருகிறது. குறிப்பாக அதிமுகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் மோடி மறைந்த முன்னாள் தலைவர் விஜயகாந்த் உடன் இருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு பதிவிட்டு இருந்தார். இதனால் அவர் அதிமுகவை போல பாஜகவில் இணையும் என பேசப்பட்டது. ஆனால் தற்போது வரை அது உறுதியாக வில்லை.

இது ஒரு பக்கம் இருக்க புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜூன் 29 2025 தேதி ஆன நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிகவின் பொருளாளர் எல் கே சதீஷ் மற்றும் திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இதனால் தேமுதிக திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேப்டன் ஸ்டைல் வேறு, விஜய் ஸ்டைல் வேறு – விஜய பிரபாகரன்:

இந்நிலையில் நேற்று 2025, ஜூன் 29, செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான், தேமுதிகவிற்கு நிகர் தேமுதிக தான். கேப்டன் விஜயகாந்தின் முறை என்பது வேறு, விஜய்யின் முறை வேறு என குறிப்பிட்டிருந்தார். மேலும் ” கேப்டன் விஜயகாந்த் மெல்ல மெல்ல கட்சிப் பணிகளை தொடங்கி அதனை கட்டமைத்து பிரம்மாண்ட கோட்டையாக படைத்தவர், விஜய் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேற்கொண்டு வருகிறார். எனவே கேப்டன் ஸ்டைல் வேறு விஜய் அண்ணா ஸ்டைல் வேறு இரண்டு பேரையும் ஒப்பிடக் கூடாது.

கடந்த காலங்களில் நடந்தது பற்றி யோசிக்காமல் தற்போது இருக்கக்கூடிய நிலைப்பாடு என்ன என்பதை யோசித்து திமுகவுடன் கூட்டணி அமைப்பதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அதேபோல் 2026 ஜனவரி ஒன்பதாம் தேதி ஏற்கனவே சொன்னது போல கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பான தெளிவான பதிலை அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.