மூதாட்டி கொடூர கொலை.. நகைக்காக காது, மூக்கை அறுத்த கொள்ளை கும்பல்.. சேலத்தில் பயங்கரம்!
Salem Woman Murder : சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு உள்ளார். மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடன், நகையை பறித்த கொள்ளை கும்பல், அவரது காது, மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், மே 21 : சேலம் மாவட்டத்தில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியிடம் நகையை பறித்த கொள்ளை கும்பல், அவரது காது, மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மூதாட்டி சரஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 68 வயதான சரஸ்வதி, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் தனது விவசாய நிலங்களில் தினமும் மாடுகளை மேய்த்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல், 2025 மே 20ஆம் தேதி நேற்று மாடு மேய்ச்சலுக்கு மூதாட்டி சரஸ்வதி சென்றிருக்கிறார். மதிய நேரத்தில் சென்ற மூதாட்டி, இரவு வரை வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
சேலத்தில் நகைக்காக மூதாட்டி கொலை
சரஸ்வதியின் விவசாய நிலத்திற்கும் சென்று உறவினர்கள் தேடி பார்த்துள்ளனர். அப்போது, அவர் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை அடுத்து, உறவினர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டி சரஸ்வதியில் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறினர். மேலும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனை அடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது, காது, மூக்கு அறுக்கப்பட்டு, நகைகள் பறிக்கப்பட்டு சென்றது தெரியவந்தது.
மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்க தோடு, தங்க மூக்குத்தி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூதாட்டியை கொலை செய்தது யார்? நோக்கம் என்ன என்பதை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் பயங்கரம்
தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. வயதானவர்களை குறிவைத்து முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்து வருகின்றனர். அதோடு, அவர்களை கொலை செய்தும் வருகின்றனர். அண்மையில் கூட, ஈரோட்டில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் ரமேஷ், மாதேஷ், ஆச்சியப்பன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவானதை அடுத்து, சந்கேதத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் மூன்று தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், சேலத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.