Edappadi Palaniswami’s 71st Birthday: எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை கொண்டாவே போர் நிறுத்தம்.. அதிமுக வைகை செல்வன் பேச்சு!
ADMK Vaigaichelvan Speech: எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் எளிமையாக கொண்டாடப்பட்டது. வைகை செல்வன் அவர்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையைக் குறிப்பிட்டு, EPS அவர்களின் தலைமைத்திறனையும், அதிமுகவின் பாஜக கூட்டணியையும் பாராட்டினார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி - வைகை செல்வன்
சென்னை, மே 12: அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் (ADMK) பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள நெருஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதாவது 2025 மே 12ம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் தங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi K. Palaniswami) வாழ்த்துகளை தெரிவிக்க அவரது இல்லத்தின் முன் திரண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர். இந்தநிலையில், அதிமுக வைகை செல்வன் (Vaigaichelvan) எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவில் இந்தியா பாகிஸ்தான் சண்டை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன பேசினார் வைகை செல்வன்..?
சென்னை அடுத்த திருவொற்றியூரில் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிடில் அதிமுக செய்து தொடர்பாளர் வைகை செல்வனும் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியா பாகிஸ்தான் சண்டை காரணமாக தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். அதனால்தான் என்னமோ, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரையே தள்ளி வைத்துள்ளார்கள் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக.. எனவே, அது ஒரு நல்ல விஷயம்தான். எடப்பாடி பழனிசாமி எதார்த்தமான தலைவர். அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியை வைத்துதான் வாக்கு சேகரிக்க போகிறார்கள். தனது பிறந்தநாளில் எளிமையான முறையில் எழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி அதிமுகவினருக்கு கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு மாற்று என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். தமிழ்நாட்டு மக்களுக்கும் இது நன்றாகவே தெரியும்.
போர் நிறுத்தம்:
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் என்பதை தெரிந்துதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்திய எல்லை பகுதிகளில் இந்திய இராணுவத்தின சிப்பாயை பாகிஸ்தான் தொட்டு பார்த்தால் கூட, ஓராயிரம் தலை உருளும் என்பதுபோல் இந்திய இராணுவத்தின் முப்படைகளும் செயல்பட்டது. அப்படிப்பட்ட சிறந்த இராணுவ தளவாயை பிரதமர் மோடி அமைத்திருக்கிறார். இந்தியாவை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். நாடு காத்த பாஜக அரசாங்கதோடு அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக தமிழ்நாடு காக்க போகிறது, தமிழ்நாட்டை காக்க போகிறவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான்” என்று தெரிவித்தார்.