காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..

வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால், நான் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிலையில், வருமான வரித்துறையினர் என்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார் இதுபோல், மு.க. அழகிரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

20 Apr 2026 12:08 PM

 IST

ஏப்ரல் 20, 2026: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், காங்கிரஸ் கமிட்டி தலைவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வப் பெருந்தகை கூறுகையில், “இது ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையாக தான் உள்ளது.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால், நான் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிலையில், வருமான வரித்துறையினர் என்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார் இதுபோல், மு.க. அழகிரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு – முதல்வர் ஸ்டாலின்..

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:

இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு மத்திய அரசை கண்டித்துள்ளார். அதில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகோதரர் செல்வப் பெருந்தகை அவர்களின் பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு கண்டனம்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 48 மணி நேரமும் இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க முயலும் இந்த நடவடிக்கை, தோல்வி பயத்தில் பாஜக அரசு மேற்கொள்ளும் அட்டூழியம் ஆகும். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..