சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.

சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Jan 2026 06:13 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 26, 2026: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர தமிழக பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா கடலோர பகுதிகள் வரை ஒரு கிழக்கு திசை வளிமண்டல காற்றாலை நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் தற்போது மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 26 தேதியான இன்று உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் மழை:

அதே சமயத்தில், 27ஆம் தேதி நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் சம்பவத்துக்கு நீங்களும் காரணம்… முதல்வரின் வீட்டில் கைகட்டி நின்றீர்கள்.. விஜய் மீது அதிமுக கடும் குற்றச்சாட்டு

சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.

3 டிகிரி வரை குறையும் வெப்பநிலை:

வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சில இடங்களில் மட்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மஹாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசலாமா? பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..