சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. இன்றும் தொடருமா? வானிலை மையம் அலர்ட்
Chennai Weather Today : சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமில்லாமல், அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே, 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பலத்த மழை
சென்னை, ஆகஸ்ட் 23 : சென்னையில் இரண்டாவது நாளான 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று கனமழை (Chennai Weather Today) பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, சென்னையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று முதலே தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் இரண்டு நாளான இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஆலந்தூர், அண்ணா நகர், நந்தனம், ஆயிரம் விளக்கும், பல்லாவரம், தாம்பரம், போரூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
Also Read : குளு குளுவென மாறிய சென்னை.. இடி மின்னலுடன் தொடரும் கனமழை – பிரதீப் ஜான்..
சென்னையில் இன்றும் தொடரும் மழை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/v7a5yzVbVp
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 22, 2025
2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வாக்கில், ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Also Read : சென்னையில் 12 செ.மீ மழை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.