சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர் – இதனால் என்ன பலன்?

India AI Mission : சென்னையில் உள்ள எல் அண்ட் டி வியோமா டேட்டா சென்டரில் இ2இ நெட்வொர்க்ஸ் நிறுவனம் புதிய ஜிபியூ கிளஸ்டரை உருவாக்கவுள்ளது. இந்த புதிய கிளஸ்டர் மூலம் ஏஐ மாடல்களை பயன்படுத்தி மருத்துவம், நிதி, வேளாண்மை, உற்பத்தி போன்ற துறைகளுக்கு ஏஐ சேவைகளை வழங்கும்

சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர் - இதனால் என்ன பலன்?

மாதிரி புகைப்படம்

Published: 

18 Feb 2026 18:07 PM

 IST

சென்னை, பிப்ரவரி 18 : அமெரிக்காவை (America) தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி ஜிபியூ (Graphic Processing Unit) உற்பத்தி நிறுவனமான என்விடியா (Nvidia) இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை வேகப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இந்திய நிறுவனங்களான யோட்டா, எல் அண்ட டி மற்றும் இ2இ நெட்வொர்க்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியாவின் ஏஐ திறனை மேம்படுத்தவும் மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து என்விடியா வெளியிட்ட தகவலின்படி யோட்டா நிறுவனம் சக்தி கிளௌட் என்ற பெயரில் 20,000க்கும் மேற்பட்ட என்விடியா பிளாக்வெல் அல்ட்ரா ஜிபியூகளை கொண்ட பெரிய ஏஐ கிளௌட் அமைப்பை உருவாகி வருகிறது. இது இந்தியாவின் ஏஐ கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர்

சென்னையில் உள்ள எல் அண்ட் டி வியோமா டேட்டா சென்டரில் இ2இ நெட்வொர்க்ஸ் நிறுவனம் புதிய ஜிபியூ கிளஸ்டரை உருவாக்கவுள்ளது. இந்த புதிய கிளஸ்டர் மூலம் என்விடியா ஏஐ மாடல்களை பயன்படுத்தி மருத்துவம், நிதி, வேளாண்மை, உற்பத்தி போன்ற துறைகளுக்கு ஏஐ சேவைகளை வழங்கும். இந்த கிளவுட் அமைப்பு ஏஐ மூலம் இயங்குவதுடன், புதிய ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளிக்கவும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் செய்யும்.

இதையும் படிக்க : ஏஐ முழுமையாக வளர்ச்சியடைந்தால் நம் வேலைகளுக்கு என்ன நடக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும்?

நெட்வெப் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏஐ சூப்பர் கம்ப்யூட்டிங் சிஸ்டம்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது என்விடியா கிரேஸ் பிளாக்வெல் நெட்வொர்க்கில் உருவாகும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஜிபியூ மற்றும் சிபியூ இணைந்து ஏஐ மாடல்களுக்கான பயிற்சி, உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படும்.

இந்திய மொழிகளில் ஏஐ

பல மொழிகள் கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற ஏஐ மாடல்கள் உருவாக்கப்படுவது முக்கியம். இதற்காக நிவிடியா நிமோட்ரான் தளத்தை பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களின் பேச்சு, மொழி மற்றும் மல்டிமாடல் ஏஐ அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

இதையும் படிக்க : ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!

மேலும் என்பிசிஐ நிறுவனம் யுபிஐ வாடிக்கையாளர் சேவைக்கான ஏஐ மாடல்களை உருவாக்குகிறது. மேலும் CoRover.ai என்ற நிறுவனம் இந்திய ரயில்வே வாடிக்கையாளர் சேவைக்கான பல மொழிகள் கொண்ட ஏஐ சேவைகளை வழங்குகிறது. மேலும் Gnani.ai நிறுவனம், நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான speech to speech ஏஐ சேவையை வழங்கவுள்ளது. Sarvam.ai, Tech Mahindra, Zoho போன்ற நிறுவனங்கள் கல்வி மற்றும் வணிக துறைகளுக்கான ஏஐ சேவைகளை வழங்கவுள்ளது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்