இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ்..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Aug 2025 16:29 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 30, 2025: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 30, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் மழையின் தீவிரம் என்பது குறைந்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்த வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

அதனைத் தொடர்ந்து திருச்சியில் 37.5 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 36.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 36.5 டிகிரி செல்சியஸ், கடலூரில் 36 புள்ளி ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. மதுரையில் இயல்பை விட 4.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வெப்பநிலை பதிவானது.

மேலும் படிக்க: ” தமிழருக்கு நடந்த துரோகம்.. நல்லாட்சி அமைய வேண்டும்” – மூப்பனார் நினைவு நாளில் நிர்மலா சீதாராமன் பேச்சு..

அதிகரிக்கும் வெப்பநிலை:

வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழையின் தீவிரமும் குறையும் நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 30 2025 தேதியான இன்று மற்றும் ஆகஸ்ட் 31 2025 தேதியான நாளை அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாறும் கூட்டணி கணக்கு? என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக… சுதீஷ் சொன்ன தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.