சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழை.. பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு..

Tamil Nadu Weather Update: சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழையானது புறநகர் பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் பதிவாகி வருகிறது, இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழை.. பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

23 Jun 2025 06:35 AM

 IST

வானிலை நிலவரம்: சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை நேரங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஜூன் 22,2025 இரவு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவானது. மேலும் ஜூன் 15 2025 முதல் ஜூன் 19 2025 வரை சென்னையின் வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணிசமாக குறைந்துள்ளது. அதாவது 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவான வெப்பநிலை என்பது தற்போது 35 டிகிரி செல்சியஸ் மற்றூம் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் மழை இருக்குமா?

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் நல்ல மழை பதிவு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை காரணமாக வரக்கூடிய மழையின் தீவிரமானது கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் பரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான் சொல்வது என்ன?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் கடந்த சில தடவைகளாக நல்ல மழை இருந்து வரும் நிலையில் ஜூன் 22 2025 தேதியான நேற்று இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பதிவானது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கனமழை பதிவானதாகும் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த சில தினங்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 2025 காலை நிலவரப்படி வால்பாறையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் 24.7 மில்லி மீட்டர் மழையும், சிவகங்கையில் 31.5 மில்லிமீட்டர் மழையும், செங்கல்பட்டில் 11.5 மில்லி மீட்டர் மழையும், சென்னை நகரில் 24.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்