Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? உஷாராக இருக்க சைபர் கிரைம் அறிவுறுத்தல்

Chennai Cyber Crime Police: சென்னை சைபர் போலீசார் வாட்ஸ்அப் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரிப்பதால் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். OTP, பாஸ்வேர்ட் போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது, ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சந்தேகமான செயல்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? உஷாராக இருக்க சைபர் கிரைம் அறிவுறுத்தல்
அதிகரிக்கும் வாட்ஸ்அப் சைபர் கிரைம் மோசடி Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Apr 2025 12:22 PM

சென்னை ஏப்ரல் 07: வாட்ஸ்அப் பயனர்களை (WhatsApp users) குறிவைத்து நடைபெறும் சைபர் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் (Chennai Cyber ​​Crime Police) அறிவுறுத்தியுள்ளனர். வாட்ஸ்அப்பில் வரும் எந்தவொரு ஓடிபி (OTP) குறியீடும், பாஸ்வேர்டும் அல்லது தனிப்பட்ட தகவல்களையும் பிறருடன் பகிரக்கூடாது என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து சைபர் மோசடிகள் அதிகரித்து வருவைத்தால் மோசடி நபர்கள் OTP (One-time password) அனுப்பி, தவறாக அனுப்பியதாக கூறி அதைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறார்கள். OTP பகிரப்பட்டால் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படும். பின்னர் அந்த கணக்கை பயன்படுத்தி, நபரின் பெயரில் பணம் கோரி மோசடி செய்கிறார்கள். இதனால் பயனர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

சைபர் மோசடிகள் (Targeted Cyber Frauds)

பயனர்களை குறி வைத்து செய்யப்படும் சைபர் மோசடிகள் (Targeted Cyber Frauds) என்பது இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நபர்களை அல்லது குழுக்களை குறி வைத்து ஏமாற்றும் செயலாகும். இவை மிகவும் திட்டமிட்ட முறையில், சில நேரங்களில் நபரின் தனிப்பட்ட தகவல்களையும் (Personal Information) பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோசடி நபர்கள் ஒருவர் மொபைல் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி குறியீட்டை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைப்பார்கள். பின்னர், தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில், “உங்களது எண்ணுக்கு தவறாக ஓடிபி சென்றுவிட்டது, தயவுசெய்து அதை அனுப்புங்கள்” என கேட்டுக்கொள்வார்கள். அந்த ஓடிபி பகிரப்பட்டால், அந்த பயனரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படும்.

உறவினர்கள் போல் நடித்து பணம் பறிப்பு

வாட்ஸ்அப் ஹேக் ஆன பிறகு, அந்த கணக்கை சைபர் குற்றவாளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு அவரைப் போலவே நடித்து செய்தி அனுப்பி பண உதவி கேட்பார்கள். உதாரணமாக, “அவசர உதவி தேவை”, “விபத்து நடந்துவிட்டது”, “மருத்துவ செலவுக்கு தேவை” போன்ற காரணங்களை கூறி பணம் கேட்டுக்கொள்வார்கள். இதனால், நம்பிக்கை கொண்டு பணம் அனுப்பிய நபர்கள் பின்னர் தான் இது மோசடி என்று புரிந்து கொள்கிறார்கள்.

ஓடிபி, பாஸ்வேர்ட் போன்றவற்றை எந்தச் சூழ்நிலையிலும் பகிரக்கூடாது

இந்த வகை சைபர் மோசடியில் மாட்டிக்கொள்ளாத இருக்க, பயனர்கள் ஓடிபி, பாஸ்வேர்ட் போன்றவற்றை எந்தச் சூழ்நிலையிலும் பகிரக்கூடாது. ஏதேனும் சந்தேகமான செயல்பாடு தெரியவந்தால், உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.