தானியங்கி முறையில் கட்டணம்.. டோல்கேட்டுகளில் அதிநவீன கேமரா பொருத்த திட்டம்..

இதனால் வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் காத்து நிற்கவேண்டிய தேவை ஏற்படாது. சுங்கச்சாவடியை வாகனங்கள் 100 கி.மீ. மற்றும் அதற்கு மேலான வேகத்தில் கடந்து சென்றாலும் அதன் பதிவு எண்ணை துல்லியமாக நவீன கேமராக்கள் அடையாளம் கண்டுபிடித்து, சுங்கக்கட்டணம் வசூலிக்க உதவி செய்யும்.

தானியங்கி முறையில் கட்டணம்.. டோல்கேட்டுகளில் அதிநவீன கேமரா பொருத்த திட்டம்..

கோப்புப் புகைப்படம்

Published: 

27 Feb 2026 13:36 PM

 IST

சென்னை, பிப்ரவரி 27: தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்க டோல்கேட்டுகளில் அதிநவீ கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் வாகனங்கள் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பதிவு எண்ணை அடையாளம் கண்டுபிடிக்கும். இந்தியாவில் 1,46,560 கிலோ மீட்டர் நீளம் உள்ள நெடுஞ்சாலையில், சுமார் 1,150 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஃபாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கரை சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்ட கருவி ஸ்கேன் செய்த பின்னர் அந்த பாதையில் உள்ள தடுப்பு தானாகவே விலகும்.

இதையும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?

நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதில்லை:

அதையடுத்து வாகனம் அங்கிருந்து செல்லும். இதேபோல சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள் கட்டணமும் செலுத்தலாம். ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதிலும், சுங்க கட்டணம் பெறுவதிலும் தாமதம் ஆவதால் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசல், எரிபொருளும் கூடுதலாக செலவாகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு எடுத்தது.

அதிநவீன கேமராக்கள்:

இதன் தொடர்ச்சியாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் (Satellite) சார்ந்து இயங்கும் ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள், ரேடியோ அதிர்வெண் அடையாள கருவி ஆகியவற்றோடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் மென்பொருளும் பொருத்தப்பட உள்ளது. இதன்மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க: திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..

வெளிநாடுகளில் இருந்து கேமரா இறக்குமதி:

இதனால் வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் காத்து நிற்கவேண்டிய தேவை ஏற்படாது. சுங்கச்சாவடியை வாகனங்கள் 100 கி.மீ. மற்றும் அதற்கு மேலான வேகத்தில் கடந்து சென்றாலும் அதன் பதிவு எண்ணை துல்லியமாக நவீன கேமராக்கள் அடையாளம் கண்டுபிடித்து, சுங்கக்கட்டணம் வசூலிக்க உதவி செய்யும். இதற்காக சீனா, தைவான், தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட ஏதாவது ஒரு நாட்டில் இருந்து அதிநவீன கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?