அமித்ஷா மதுரையில்.. முதல்வர் ஸ்டாலினின் வசன போஸ்டர்: நடந்தது என்ன?

Amit Shah in Madurai: மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பதாகைகள் மதுரையில் வைக்கப்பட்டுள்ளன. அமித்ஷாவின் வருகையும், ஸ்டாலின் பதாகைகளும் மதுரையில் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன.

அமித்ஷா மதுரையில்.. முதல்வர் ஸ்டாலினின் வசன போஸ்டர்: நடந்தது என்ன?

மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் வசன போஸ்டர்

Updated On: 

08 Jun 2025 12:19 PM

மதுரை ஜூன் 08: மதுரையில் இன்று (2025 ஜூன் 8) மாலை பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர் விமான நிலையம் அருகே சிந்தாமணி பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகரின் பல பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் வாசகங்களுடன் கூடிய பிரம்மாண்ட பதாகைகள் இடப்பட்டு, பெரும் கவனம் பெற்றுள்ளன.

பாஜக நிர்வாகிகள் கூட்டம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (2025 ஜூன் 8) மாலை பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பங்கேற்கிறார். அமித்ஷா, டில்லியில் இருந்து தனி விமானத்தில் 2025 ஜூன் 07 நேற்று இரவு 10:40 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

இன்று காலை 11:20 மணிக்கு அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து, பின்னர் மாலை 4:05 மணிக்கு ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அமித்ஷா வருகையையொட்டி மதுரை நகரில் பாதுகாப்பு பணிகள் கம்பீரமாக மேற்கொள்ளப்பட்டு, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் பறந்த டிரோன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2025 ஜூன் 07 நேற்று இரவு விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். விமான நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் அமைந்த தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவரது வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடையை மீறி ஒரு டிரோன் பறந்ததைக் காரணமாக பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிகழ்வை தொடர்ந்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அரசை மற்றும் குறிப்பாக அமித்ஷா அமைச்சரை விமர்சித்துள்ளார். “எங்கள் தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு Out of Control; டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு எப்போதும் வீழாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா மதுரை வருகை

அமித்ஷா பங்கேற்கும் கூட்டம்

ஒத்தக்கடை பகுதியில் இன்று (2025 ஜூன் 8) மாலை பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து போஸ்டர்

இந்த நிலையில், மதுரை மாநகரின் பல பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் வாசகங்களுடன் கூடிய பிரம்மாண்ட பதாகைகள் இடப்பட்டு, பெரும் கவனம் பெற்றுள்ளன.