Eid Milad-un-Nabi: மிலாடி நபி பண்டிகை எப்போது? – தேதியை அறிவித்த தலைமை காஜி!

தமிழக அரசின் காஜி, 2025 ஆம் ஆண்டுக்கான மிலாடி நபி பண்டிகையை செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 24 அன்று பிறை தெரிந்ததை அடுத்து இந்த தேதி உறுதி செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகம்மது நபியின் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Eid Milad-un-Nabi: மிலாடி நபி பண்டிகை எப்போது? - தேதியை அறிவித்த தலைமை காஜி!

மிலாடி நபி பண்டிகை

Updated On: 

25 Aug 2025 08:00 AM

தமிழ்நாடு, ஆகஸ்ட் 25: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி 2025 ஆம் ஆண்டு எப்போது கொண்டாடப்படும் என்ற விவரத்தை தமிழக அரசின் காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி நேற்று (ஆகஸ்ட் 24) பிறை தெரிந்ததால் இப்பண்டிகையானது செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் இறை தூதராக அறியப்படும் நபிகள் நாயகம் இதே நாளில் தான்  பிறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மிலாடி நபி பண்டிகை இஸ்லாமியர்களின் நாட்காட்டியான அவ்வல் மாதம் 12ம் நாள் கடைபிக்கப்படும். இது இஸ்லாமியர்களின் மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிலாடி நபி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதியா அல்லது 5ஆம் தேதியா என்ற குழப்பம் நிலவி வந்தது. இஸ்லாமியர்கள் பிறை பார்த்து தங்களுடைய முக்கிய விசேஷ தினங்களை கடைபிடிப்பது வழக்கம் என்பதால் தற்போது தேதியானது இறுதி செய்யப்பட்டுள்ளது.

மிலாடி நபி சிறப்புகள் 

இஸ்லாமியர்கள் இந்நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதுடன் தங்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகள்,  புத்தாடைகள் வழங்கி மகிழ்வார்கள். மேலும் மசூதிகளில் மிலாடி நபி நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு முகமது நபிகள் கேட்க போதனைகள் மற்றும் அவரின் சிறப்புகள் குறித்து உரை நிகழ்த்தப்படும். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இந்த நாளில் விரதம் இருந்து அவர்களுடைய மத நூலான குர்ஆனை வாசிப்பார்கள். மேலும் இஸ்லாமியர்களின் விசேஷ நாளான இன்று தமிழக அரசு விடுமுறை விடப்படும்.

நபிகள் நாயகம் பற்றிய சில தகவல்கள் 

இஸ்லாமியர்களின் இறை தூதராக அறியப்படும் நபிகள் நாயகம் கிபி 570 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாள்காட்டியான அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாளில் மெக்காவில் பிறந்தார். இவருடைய பெற்றோர் அப்துல்லா மற்றும் ஆமினா ஆவார்கள். இதில் அப்துல்லா என்றால் கடவுளின் அடிமை என்றும் ஆமினா என்றால் அமைதி மற்றும் பாதுகாப்பு என்றும் பொருள்படும். ஆமினா அரபு நாட்டிலுள்ள பழங்குடி இனமான குரேஷி இனத்தின் உன்னத பெண்ணாக போற்றப்பட்டு வருகிறார்.

ஆமினாவின் வயிற்றில் முகமது நபி கருவுற்ற நாளிலிருந்து அரபு நாடுகளில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.  முகமது நபி எங்கெல்லாம் சிறுவயதில் இருந்து பயணப்பட்டாரோ அங்கெல்லாம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தது. இதற்கிடையில் அவரது இளம் வயது வரை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்ததால் சகிப்புத்தன்மை, பொறுமை, மக்களை வழி நடத்தும் திறமை ஆகியவற்றை முகமது நபி கற்றுத் தேர்ந்தார்.

நபி என்றால் இறைத்தூதர் என்று அர்த்தமாகும். ஆனால் இந்த மிலாடி நபி பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்களின் ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவிப்பதில்லை. காரணம் நபிகள் நாயகம் எங்கேயும் தனது பிறந்த நாளை வெளிப்படுத்துவதோ அல்லது அந்த நாளை கொண்டாட வேண்டும் என்பதோ சொல்லவில்லை என அவர்கள் கருத்தாக உள்ளது. ஈராக் நாட்டில் தான் இந்த மிலாடி நபி பண்டிகையை கொண்டாடும் வழக்கம் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் நபிகள் நாயகம் சொன்ன கருத்துகள் இஸ்லாமிய மக்கள் தாண்டி பிற மத மக்களாலும் இன்றளவும் மதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.