தவெக மாநாடு.. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல்.. 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!

TVK Madurai Conference : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மாநாட்டிற்கு வந்த நிலையில், அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாநாடு.. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல்.. 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!

உயிரிழந்த இளைஞர்

Published: 

22 Aug 2025 06:15 AM

மதுரை, ஆகஸ்ட் 22 : மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் (TVK Madurai Conference) 18 வயது இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. விஜய் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு முதல் நாள் முன்பே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தன. மாநாட்டிற்காக இருசக்கர வாகனம், கார், வேன், பஸ் மூலம் சாரசாரையாக வந்து இறங்கினர். விஜய்யை பார்ப்பதற்காக மாநாடு திடலில் லட்சக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் என வருகை தந்தனர். அதோடு, சிலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தனர். விஜய் குழந்தைகளை அழைத்து வரக் கூடாது என ஆர்டர் போட்டு, அதை மீறி சிலர் அழைத்து வந்துள்ளனர்.

மேலும், கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கழிவறையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாநாடு தடலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மேலும், கொளுத்து வெயிலிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலில் அமர்ந்திருந்தனர். தவெக மாநாடு பிற்பகல் 3.30 மணி தொடங்கிய நிலையில், 5.30 வரை நடந்தது. அதுவரையும் தொண்டர்கள் வெயிலின் அமர்ந்தப்படி இருந்தனர். இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் ராம்ப் வாக் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

தவெக மாநாட்டிற்கு வந்த இளைஞர் பலி

அதோது, விஜய் சராசரியாக 35 நிமிடங்கள் உரையாற்றினார். இதற்கிடையில், தவெக மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 வயது இளைஞர் உயிரிழந்தார். அதாவது, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞர் ரோஷன். இவருக்கு மாநாட்டு திடலிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, உடனே அங்கிருந்த மருத்துவக் குழுக்கள் அவருக்கு முதலுதவி அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சமயநல்லூர் அருகே மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அக்கம் பக்கத்தினர் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தவெக மாநட்டிற்கு வந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார். அதாவது, சென்னையைச் சேர்ந்தவர் (33). இவர் தவெக மாநாட்டிற்கு வேனில் நண்பர்களுடன் புறப்பட்டு வந்துள்ளார். மதுரை அருகே வந்தபோது, பிரபாகரன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது, அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, நண்பர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.