Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: கிரிக்கெட் போதும்.. புது கேமில் புகுந்து விளையாடிய விராட் – அனுஷ்கா ஜோடி.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

Virat Kohli and Anushka Sharma: ஐபிஎல் 2025 சீசன் முடிந்த பின்னர், விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருடன் பிக்கிள் பால் என்ற விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் RCB இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. விராட் மற்றும் அனுஷ்கா ஒரு அணியாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்த அரிய விளையாட்டில் RCB வீரர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

IPL 2025: கிரிக்கெட் போதும்.. புது கேமில் புகுந்து விளையாடிய விராட் – அனுஷ்கா ஜோடி.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
விராட் கோலி - அனுஷ்கா சர்மாImage Source: PTI and Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 21 May 2025 15:43 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால், இந்திய அணிக்காக இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார். மேலும், ஐபிஎல்லில் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப்களில் முதல் அணியாக சென்றது. இந்த மகிழ்ச்சியானது விராட் கோலி முகத்தில் தெளிவாக தெரிகிறது. இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் (Anushka Sharma) வேறு ஒரு விளையாட்டை விளையாடி மகிழ்ந்தார். இந்த விளையாட்டானது பல இந்தியர்களும் கேள்விப்பட்டிராத ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டின் பெயர் பிக்கிள் பால். இந்த பிக்கிள் பால், சற்று டென்னிஸை போல் காட்சியளித்தாலும் சற்று வித்தியாசமானது.

விராட்டும் அனுஷ்காவும் ஒரே விளையாட்டில் அசத்தல்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கியுள்ள அதே ஹோட்டலில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் பிக்கிள் பந்து விளையாடினார்கள். இவர்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி, எதிரணி வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இந்த புகைப்படங்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும், இந்த விளையாட்டை விளையாடியவரக்ள் விராட்டும், அனுஷ்காவும் மட்டுமல்ல, பெங்களூரு அணியை சேர்ந்த அனைத்து வீரர்களும், துணை பயிற்சியாளர்களும் விளையாடினர். அதன்படி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட பல பெங்களூரு அணியின் கிரிக்கெட் வீரர்களும் விளையாடினார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

விராட் – அனுஷ்கா:

விராட்டும் அனுஷ்காவும் இந்த விளையாட்டை மிகவும் ரசித்தனர். வெற்றி பெற்ற பிறகு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை புகைப்படத்தில் காணலாம். அநேகமாக தினேஷ் கார்த்திக்கும் அவரது மனைவி தீபிகாவும் விளையாடியுள்ளனர். தினேஷ் கார்த்திக் தற்போது ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.தினேஷின் மனைவி தீபிகா பல்லிகல் ஒரு தொழில்முறை ஸ்குவாஷ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியின் அடுத்த போட்டி எப்போது..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற 2025 மே 23ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. மழை எச்சரிக்கை காரணமாக, இந்த போட்டியானது லக்னோவிற்கு மாற்றப்பட்டது. இந்த போட்டிக்கு பிறகு, பெங்களூரு அணி மீண்டும் வருகின்ற 2025 மே 27ம் தேதி அதே ஸ்டேடியத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!...
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?...