Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மழைக்கு வாய்ப்பு..? டெல்லி அணிக்கு பிளே ஆஃப் ஆப்பா..? இடத்தை மாற்ற கோரிக்கை!

Mumbai Indians vs Delhi Capitals: ஐபிஎல் 2025 இன் 63வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன. மழை அச்சுறுத்தலால் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். டெல்லி தோற்றால் பிளேஆஃப் வாய்ப்பு குறையும். மும்பை வெற்றி பெற்றால், பிளேஆஃப் தகுதி பெற நான்காவது அணியாக அமையும். டெல்லி உரிமையாளர், மழையால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

IPL 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மழைக்கு வாய்ப்பு..? டெல்லி அணிக்கு பிளே ஆஃப் ஆப்பா..? இடத்தை மாற்ற கோரிக்கை!
டெல்லி கேபிடல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 21 May 2025 11:54 AM

2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 18 (IPL 2025) இன் 63வது போட்டி இன்று அதாவது 2025 மே 21ம் தேதி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் மோதவுள்ளது. MI vs DC அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டி பிளேஆஃப்களுக்கு முக்கியமானது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வியடைந்தால், பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறும். மேலும்  ஐபிஎல் 2025க்குள் மும்பை அணி நான்காவது அணியாக தகுதி பெறும். அதேசமயம் டெல்லி வெற்றி பெற்றால் எந்த அணியும் இப்போது தகுதி பெறாது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் டெல்லி அணி மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.

வானிலை எப்படி..?

இன்று அதாவது 2025 மே 21ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்கு 15 புள்ளிகளும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 14 புள்ளிகளும் இருக்கும். பின்னர் இரு அணிகளின் அடுத்த போட்டி பஞ்சாப் கிங்ஸுடன். அந்த போட்டியில் மும்பை வென்றால், டெல்லி தனது கடைசி போட்டியில் வென்றாலும், அது பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிவிடும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் என்ன எழுதினார்?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் “மும்பையில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான ஆட்டம் நிலைத்தன்மை மற்றும் லீக்கின் நலனுக்காக பெங்களூருவில் இருந்து மாற்றப்பட்டதைப் போலவே, இன்றைய (2025 மே 21) ஆட்டத்தையும் வேறு இடத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் கடந்த 6 நாட்களாக மும்பையில் மழை பெய்த நிலையில் 2025 மே 21ம் தேதி கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் கூடுதலாக 60 நிமிடங்கள் என்ற விதி அறிமுகப்படுத்தப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்து, கொல்கத்தா அணி நிர்வாகம் பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியது. ஆனால், மழைக்கான புதிய விதி இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

MI vs DC போட்டி மழையால் ரத்தானால் என்ன செய்வது?

தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தலா போட்டிகளில் விளையாடியுள்ளன. மும்பை அணி 14 புள்ளிகளையும், டெல்லி அணி 13 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பைக்கு 15 புள்ளிகளும், டெல்லிக்கு 14 புள்ளிகளும் கிடைக்கும்.

இரு அணிகளின் கடைசி போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. டெல்லி அணி பஞ்சாபை தோற்கடித்தாலும், பஞ்சாப் vs மும்பை போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் டெல்லி பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறும். அதேநேரத்தில், மும்பை  தோல்வியடைந்தால் டெல்லி பிளேஆஃப் செல்லும். மறுபுறம், டெல்லி அணி பஞ்சாபிடம் தனது போட்டியில் தோற்றால், மும்பை அணி தனது கடைசி போட்டியில் தோற்றாலும் கூட, மும்பை ஐபிஎல் 2025 சீசனில் இருந்து வெளியேறும்.

அந்த படத்தில் நடிக்கும்போது அருவருப்பாக இருந்தது- நடிகை மீனா!
அந்த படத்தில் நடிக்கும்போது அருவருப்பாக இருந்தது- நடிகை மீனா!...
சிறிய பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் அவசியமா? நன்மைகள் என்ன?
சிறிய பயணங்களுக்கு டிராவல் இன்சூரன்ஸ் அவசியமா? நன்மைகள் என்ன?...
கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் பானங்கள்.. அழகையும் பராமரிக்கும்!
கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் பானங்கள்.. அழகையும் பராமரிக்கும்!...
தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி லிரிக்கள் வீடியோ!
தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி லிரிக்கள் வீடியோ!...
லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர் - வைரல் வீடியோ!
லண்டனில் இளநீர் விற்பனை செய்யும் இங்கிலாந்தவர் - வைரல் வீடியோ!...
துபாயில் மர்மமாக மறைந்த நிறுவனம் - பணத்தை இழந்த இந்தியர்கள்
துபாயில் மர்மமாக மறைந்த நிறுவனம் - பணத்தை இழந்த இந்தியர்கள்...
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?...
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?
Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும் - எப்படி தெரியுமா?...
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்
சந்திர மங்கள யோகம்.. இந்த 6 ராசிக்கு செல்வம் பெருகும்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு
பாகிஸ்தானுக்கு உளவு பார்ந்த இந்திய பெண் - வாட்ஸ்அப் சாட் வெளியீடு...