HBD Suresh Raina: மிஸ்டர் ஐபிஎல்.. மிராக்கிள் பீல்டர்.. சுரேஷ் ரெய்னாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!

Happy Birthday Suresh Raina: ஜூலை 30, 2005 அன்று, சுரேஷ் ரெய்னா இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். ரெய்னா 2006 ஆம் ஆண்டு தனது டி20 அறிமுகத்தையும், 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தையும் செய்தார்.

HBD Suresh Raina: மிஸ்டர் ஐபிஎல்.. மிராக்கிள் பீல்டர்.. சுரேஷ் ரெய்னாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!

சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்

Published: 

27 Nov 2025 10:22 AM

 IST

முன்னாள் இந்திய கிரிக்கெட் (Indian Cricket Team) வீரர் சுரேஷ் ரெய்னா தனது அதிரடி பேட்டிங், அட்டகாச பீல்டிங் மற்றும் தேவைகேற்ப பந்துவீச்சு என உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்தார். சமூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) ஆவார். சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இந்தநிலையில், இந்திய அணியில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் சுரேஷ் ரெய்னா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ALSO READ: திருமணம் எப்போது..? நீக்கப்பட்ட பதிவுகள்! ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு..!

சுரேஷ் ரெய்னாவின் ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கை:


நவம்பர் 27, 1986 அன்று முராத்நகரில் பிறந்த சுரேஷ் ரெய்னா வீட்டில் சுட்டிக்குழந்தையாக சுற்றி வந்தார். சோனு என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. 11 வயதில், ரெய்னா அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து கிரிக்கெட் விளையாடுவார். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்ததால், காலையில் எழுந்திருக்க வேண்டிய அவசரம் காரணமாக இரவு முழுவதும் சரியாக தூங்க மாட்டாராம்.

ரெய்னா படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று குடும்பத்தினர் நினைத்தாலும், அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வமே அதிகமாக இருந்தது. அதன்படி, ரெய்னா அறையில் படிப்பதை விட விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதையே அதிகம் காண முடிந்தது. ஒரு முறை சுரேஷ் ரெய்னா லக்னோவின் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்தபோது, சீனியர்கள் அவரை தங்கள் தனிப்பட்ட வேலைகளைச் செய்ய வைத்தனர். மேலும், இழிவான செயல்களை செய்து ரெய்னாவை மிகவும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்தினர். இருப்பினும், ரெய்னா கிரிக்கெட்டை கைவிடவில்லை.

2002/03 ஆம் ஆண்டு ரெய்னா தனது முதல் தர கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டார். இது இந்திய அணிக்காக பாதையை பெற்று கொடுத்தது.

சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ஜூலை 30, 2005 அன்று, சுரேஷ் ரெய்னா இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். ரெய்னா 2006 ஆம் ஆண்டு தனது டி20 அறிமுகத்தையும், 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தையும் செய்தார். தனது சர்வதேச வாழ்க்கையில், சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட் போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் 768 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஏழு அரைசதங்கள் அடங்கும்.

ALSO READ: 25 ஆண்டுகளுக்கு பிறகு! டெஸ்ட் தொடரை வென்ற SA.. இந்தியா மோசமான சாதனை படைப்பு!

சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் 194 இன்னிங்ஸ்களில் 5615 ரன்கள் எடுத்தார், இதில் ஐந்து சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் அடங்கும். 78 டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் உட்பட 1604 ரன்களையும் எடுத்தார். பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!