Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCBvSRH : இஷான் கிஷன் சரவெடி… 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி

RCBvSRH : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 இடத்தில் உள்ளது. எனவே இந்த தோல்வி அந்த அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது

RCBvSRH : இஷான் கிஷன் சரவெடி…  42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி
RCB V SRH
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 24 May 2025 00:19 AM

ஐபிஎல் 2025ல் லக்னோவில் உள்ள எகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நான்கு ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது. நான்காவது ஓவரின் கடைசி பந்தில் புவனேஷ்வர் குமாரின் பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தபோது இந்த கூட்டணி முறிந்தது. ஹெட் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அபிஷேக் சர்மாவும்  17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் – கிளாசென் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

இஷான் கிஷான் மற்றும் கிளாசென் ஆகியோரின் மூன்றாவது விக்கெட் கூட்டணி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியாக ரன் சேர்த்தனர்.  கிஷன்-கிளாசன் கூட்டணியில் சரவெடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி ஒன்பது ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இந்த நிலையில்  கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து சுயாஷ் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தார் பின்னர் அனிகேத் வர்மா களமிறங்கி தொடக்கத்திலிருந்தே பந்தை அடித்து நொறுக்கினார். சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர்போர்டில் மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்த அனிகேத், 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த விக்கெட் குருணால் பாண்டியாவுக்கு சென்றது.

பெங்களூருவுக்கு 232 ரன்கள் இலக்கு

பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஏமாற்றமளித்தார். இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே மோசமான ஃபார்மில் இருந்த அவர் 7 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறிது நேரத்திலேயே ஷெப்பர்ட் அபினவ் மனோகரையும் வெளியேற்றினார். மனோகரின் பங்களிப்பு 11 பந்துகளில் 12 ரன்கள். ஒரு பக்கம் விக்கெட்டுகள் போலனாலும்  இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார் .  இஷான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆறு பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சொதப்பிய பெங்களூரு பேட்ஸ்மென்கள்

இதனையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. பெங்களுரூ அணியில் விராட் கோலியும் பில் சால்ட்டும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி நல்ல துவக்கம் தந்தனர். பவர் பிளேயில் இருவரும் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இருப்பினும் விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஷேக் சர்மாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என 43 ரன்கள் எடுத்திருந்தார்.

மற்றொரு பக்கம் அதிரடி காட்டிய பில் அரை சதம் கடந்தார். இந்த நிலையில் 32 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரி என அதிரடி காட்டிய அவர் 64 ரன்கள் குவித்து ஹர்சல் படேல் பந்து வீச்சில் அவுட்டானார் அஆனால் அதன் பிறகு வந்த பெங்களூரு வீரர்கள் ஹைதராபாத் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 42 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் சார்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், இஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் ஜெயதேவ் உனட்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!
வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!...
இந்தியா உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளோம் - பாக்!
இந்தியா உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளோம் - பாக்!...
மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்
மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்...
நீங்க யாருன்னு தெரியல! - விராட் கோலியிடம் வாங்கி கட்டிய சிம்பு!
நீங்க யாருன்னு தெரியல! - விராட் கோலியிடம் வாங்கி கட்டிய சிம்பு!...
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்? - சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்? - சுகாதாரத்துறை விளக்கம்!...
ஏற்காடு மலர் கண்காட்சி... கட்டணம் எவ்வளவு? முழு விவரம்
ஏற்காடு மலர் கண்காட்சி... கட்டணம் எவ்வளவு? முழு விவரம்...
ஜிவி பிரகாஷின் 'இம்மார்டல்' பட ஷூட்டிங் போட்டோ வைரல்!
ஜிவி பிரகாஷின் 'இம்மார்டல்' பட ஷூட்டிங் போட்டோ வைரல்!...
TNPSC குரூப் 4 தேர்வு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
TNPSC குரூப் 4 தேர்வு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!...
சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து!
சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து!...
பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் நிதி ஆயோக கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் நிதி ஆயோக கூட்டம்!...
சுற்றுலாபயணிகளே உஷார்...ஆழியார் அணையில் சுற்றித்திரியும் யானைகள்!
சுற்றுலாபயணிகளே உஷார்...ஆழியார் அணையில் சுற்றித்திரியும் யானைகள்!...