Shubman Gill: ஆஷிஷ் நெஹ்ரா ஒரு லெஜெண்ட்! வீரர்கள் மீது தனித்தனி கவனம்.. பயிற்சியாளரை புகழ்ந்து தள்ளிய கில்..!
Gill Praises Nehra's Coaching: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், 2025 ஐபிஎல் சீசனில் அணியின் வெற்றிக்கு தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். நெஹ்ராவின் தலைமை, அணியின் கட்டமைப்பு மற்றும் வீரர்களின் பயன்பாடு குறித்த தெளிவான பார்வை ஆகியவற்றை கில் குறிப்பிட்டுள்ளார். அவரது வீரர்களுடனான தொடர்பு மற்றும் தனிப்பட்ட பயிற்சி முறைகளையும் கில் பாராட்டினார். இந்த வெற்றிக்கு நெஹ்ராவின் பந்துவீச்சு பிரிவு வழிநடத்தல் முக்கியக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் அணியின் அற்புதமான செயல்பாட்டிற்கு தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் (Ashish Nehra) பங்களிப்பே காரணம் என பாராட்டியுள்ளார். மேலும், ஆஷிஷ் நெய்ராவிற்கு ஒரு அணியை எவ்வாறு தயார் செய்வது என்பது நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமானபோதே, ஆஷிஷ் நெஹ்ராவின் பயிற்சியின் கீழ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சுப்மன் கில் பாராட்டு:
𝑻𝒉𝒆 𝑼𝒏𝒔𝒕𝒐𝒑𝒑𝒂𝒃𝒍𝒆 𝑫𝒖𝒐: 𝑮𝒊𝒍𝒍 & 𝑵𝒆𝒉𝒓𝒂 𝑱𝒊- 𝑱𝒐𝒅𝒊 𝑵𝒖𝒎𝒃𝒆𝒓 𝟏 🔥
.
.
📸 : JioHotstar
. #gujrattitans #IPL #ipl2025 #shubmangill #ashishnehra #jodino1 #iplupdates #iplnews #explorecricket #explorepage #CricketNews #cricketupdates #CricketGyan pic.twitter.com/kJaXho3x39— Cricket Gyan (@cricketgyann) May 2, 2025
ஜியோ ஹாட்ஸ்டாருடனான உரையாடலின்போது குஜராத் டைட்டன்ஸ் செயல்திறன் குறித்தும், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா குறித்தும் கில் பேசினார். அதில், “குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டில் விளையாடியபோது ஆஷிஷ் நெஹ்ராவுக்கு தெளிவான பார்வை இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியை எப்படி கட்டமைக்க வேண்டும், வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வீரர்களுடனான அவரது தொடர்பு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரின் முன்னேற்றங்களை செய்யக்கூடிய விஷயங்களை மேற்கொள்வார். மேலும், ஒவ்வொரு வீரர்களுடன் குறிப்பாக பந்து வீச்சாளர்களுடன் தனித்தனியாக பணியாற்றும் விதம் தனித்துவமானது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஐபிஎல்லில் வெற்றி பெறுவது பேட்ஸ்மேன்களின் பலத்தால்தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எங்களது சித்தாந்தம் என்பது வேறு. எவ்வளவு ஸ்கோரை பதிவு செய்தால், அந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் சிக்கல்தான். ஆஷிஷ் நெஹ்ரா பந்துவீச்சு பிரிவை வழிநடத்தும் விதம் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது” என்றார்.
சாய் சுதர்சனுடான கூட்டணி:
சாய் சுதர்சனுடான கூட்டணி குறித்து பேசிய சுப்மன் கில், “நாங்கள் பேட்டிங் செய்யும்விதம் ஒரே மாதிரியாக இல்லை என்று நான் நினைக்கிறேன். இடது மற்றும் வலது கை பேட்டிங் அணிக்கு நல்ல தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்து தருகிறது. நாங்கள் இருவரும் விக்கெட்டுகளுக்கு இடையில் நன்றாக ஓடுவோம். பந்து வீச்சாளர்கள் உட்பட எதிரணியை விஞ்ச விரும்பும் வீரர்கள் நாங்கள்” என்றார்.
ஐபிஎல் 2025 சீசனில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணி தொடக்க ஜோடியாக 76.27 சராசரியில் 839 ரன்கள் எடுத்துள்ளனர். இதில், 3 சத பார்ட்னர்ஷிப்களும், 4 முறைக்கு மேல் 50 ப்ளஸ் பார்ட்னஷிப்களும் அடங்கும்.