Kingdom : இதயம் உள்ளே வா… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்திலிருந்து வெளியான முதல் தமிழ் சிங்கிள்!
Kingdom Movie First Tamil Single : தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் பேமிலி ஸ்டார் படத்தைத் தொடர்ந்து, ஆக்ஷன் படமாக உருவாகிவருவது கிங்டம். இந்த படத்தில் இருந்து இதயம் உள்ளே வா என்ற முதல் தமிழ்ப் பாடல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri). இவரின் இயக்கத்தில் சில ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் (Vijay Deverakonda) நடிப்பில் உருவாகியுள்ள படம் கிங்டம் (Kingdom). இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா அதிரடி ஆக்க்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இவர் முதன் முறையாக நடிகர் விஜய் தேவரக்கொண்டவுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிங்க்டம் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதை நடிகர் விஜய் தேவரகொண்டா யாரும் எதிர்பார்காத ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி படத்தைத் தயாரித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து தமிழில் காதல் உள்ளே வா என்ற பாடலை, இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Enjoy the song now in Tamil ❤️#IdhayamUlleVaa https://t.co/WAT94NxHgH #Kingdom from July 4.@anirudhofficial @gowtam19 @vamsi84 pic.twitter.com/Vj6tKrlnnh
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 22, 2025
நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த கிங்டம் படத்தில் சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் 2025, மே 30ம் தேதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் கலவரம் நிலவியது. அதன் காரணமாகவும், படத்தின் போஸ்ட் புரொடக் ஷன் காரணமாகவும் படக்குழு வெளியிட்டு தேதியை ஒத்திவைத்து. அதன்படியாக இந்த கிங்டம் படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யா தேவ் மற்றும் கௌஷிக் மகாதா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது தெலுங்கில் மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒரு வேலை இந்த படம் உறுதியானால் நிச்சயமாக பிளாக் பஸ்டர் படமாகும் என்பதற்கு எந்தவித எதிர்ப்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.