Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்.. கொந்தளித்த இணைய வாசிகள்!

Wife Beats Husband on Bike Ride | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது தனது கணவரை செருப்பால் அடித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்.. கொந்தளித்த இணைய வாசிகள்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 22 May 2025 20:42 PM

கணவன் – மனைவிக்குள் சணடை வருவது இயல்பான ஒரு விஷயம் தான். ஒரே குடும்பத்தில் வாழும்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு, அது சண்டையாக மாறிவிடும். அந்த வகையில், ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கும்போது ஒரு ஆணின் பின்னால் அமர்ந்திருக்கும் இளம் பெண் ஒருவர் அவரை செருப்பால் அடிக்கிறார். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டே கணவனை செருப்பால் அடித்த பெண்

கணவன் – மனைவி இடையே சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு சண்டை வரும்போது சிலர் எல்லை மீறி தங்களது துணையை தாக்க தொடங்கிவிடுவர். அவ்வாறு தங்களது துணையை தாக்குவது மிக மோசமான மனநிலையாக கருதப்படுவது மட்டுமன்றி, அது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான நபர்கள் இத்தகை வன்முறை செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இளம்  பெண் ஒருவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கும்போதே தனது கணவரை செருப்பால் அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு ஆண் மற்றும் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது திடீரென பின்னால் அமர்ந்திருக்கும் பெண், அந்த ஆணை தனது காலில் இருந்த செருப்பை கழட்டி அடிக்க தொடங்குகிறார். பட்டப்பகலில், போக்குவரத்து மிகுந்த சாலையில் அவர் இத்தகைய கொடூர செயலில் ஈடுபடுகிறார். ஆனால், வாகனம் ஓட்டும் அந்த நபரோ அதை பற்றி கண்டுக்கொள்ளாமல் வாகனம் ஓட்டி செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த நபரிடம் இவ்வாறு கொடூரமாக நடந்துக்கொள்ளும் அந்த பெண்ணுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி?
ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது எப்படி?...
பயங்கரவாதிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் - ஜெய்சங்கர்!
பயங்கரவாதிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் - ஜெய்சங்கர்!...
எலும்பு ஆரோக்கியத்தை சட்டென அதிகரிக்கும் 5 விதைகள் இவைதான்!
எலும்பு ஆரோக்கியத்தை சட்டென அதிகரிக்கும் 5 விதைகள் இவைதான்!...
வீரர்கள் மீது தனித்தனி கவனம்.. ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த கில்..!
வீரர்கள் மீது தனித்தனி கவனம்.. ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த கில்..!...
இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்!
இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்!...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மதுரையில் போட்டியா?
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மதுரையில் போட்டியா?...
சுமோ டூ வல்லமை... இந்த வாரம் ஓடிடியில் எந்தப் படம் பாப்பீங்க?
சுமோ டூ வல்லமை... இந்த வாரம் ஓடிடியில் எந்தப் படம் பாப்பீங்க?...
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!...
மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!
மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!...
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?...
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?...