Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Immortal: ஜிவி பிரகாஷின் ‘இம்மார்டல்’ படம்… ரசிகர்களைக் கவரும் ஷூட்டிங் போட்டோ!

Immortal Film Shooting Photos : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் மற்றும் டிராகன் பட நடிகை கயாடு லோஹரின் நடிப்பிலும் உருவாகி வரும் படம் இம்மார்டல். இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Immortal: ஜிவி பிரகாஷின் ‘இம்மார்டல்’ படம்… ரசிகர்களைக் கவரும் ஷூட்டிங் போட்டோ!
ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 24 May 2025 07:54 AM

தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon). அந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் இந்த படமானது பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இவரின் நடிப்பில் STR 49( STR49), இதயம் முரளி (Idhayam Murali) என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து , இவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் (G.V. Prakash) உடன் நடித்தது வரும் படம்தான் இம்மார்டல் (Immortal). இந்த படத்தினை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கயாடு லோஹர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பார்வை கடந்த 2025, மே மாதம் 9ம் தேதியில் வெளியாகியது.

இந்த படமானது ரோமன்ஸ், நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக நிலையில், அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை, ஏகே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்து வருகிறார். தனது நடிப்பில் உருவாகும் முக்கால்வாசி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷே இசையமைத்துவரும் நிலையில், இந்த இம்மார்டல் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார்.

நடிகை கயாடு லோஹர் இந்தப் படத்தைத் தொடர்ந்து டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகிவரும் இதயம் முரளி மற்றும் சிலம்பரசனின் STR 49 படத்திலும் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டிராகன் பா வெற்றியைத் தொடர்ந்து, இவருக்குத் தமிழில் மட்டுமே 3 படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிப்பதும் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹரின் இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!...
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!...
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" துணை உதயநிதி ஸ்டாலின்
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி...
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!...
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!...
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!...
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க......
கொல்லப்பட்ட 20,000 மக்கள்.. ஐ.நா கவுன்சிலில் கொதித்த இந்தியா
கொல்லப்பட்ட 20,000 மக்கள்.. ஐ.நா கவுன்சிலில் கொதித்த இந்தியா...
ஜனநாயகனுடன் பராசக்தி போட்டியா? - இயக்குநர் சுதா கொங்கரா பதில்!
ஜனநாயகனுடன் பராசக்தி போட்டியா? - இயக்குநர் சுதா கொங்கரா பதில்!...