Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்” துணை உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Udhayanidhi Stalin On ED Raid : அமலாக்கத்துறை சோதனைக்கும், பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், தப்பு செய்கிறவர்களே பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டிய அவசியல் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

”ED-க்கும்,  மோடிக்கும் பயப்பட மாட்டோம்” துணை உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதி ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 May 2025 13:44 PM

சென்னை, மே 24 : அமலாக்கத்துறை சோதனைக்கும், பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi stalin) பேசியுள்ளார். மேலும், தப்பு செய்கிறவர்களே பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டிய அவசியல் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2025 மே 24ஆமம் தேதியான இன்று துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அவற்றின் கீழ் வரும் கிராம ஊராட்சி மன்றங்களில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழிலாளர், போக்குவரத்து வசதி என பல்வேறு துறைகைள் அதிகாரிகளுடன் அந்தந்த துறைகள் குறித்து கேட்டறிந்தார்.

”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்”

அதைத் தொடர்ந்து,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பிரதமர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் நிதி உரிமைய கேட்பதற்காக நிதி அயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ண தான் செய்வார்கள்” என்று விளக்கம் அளித்தார். அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “நான் பலமுறை கூறியிருக்கிறேன். நாங்கள் அமலாக்கத்துறை சோதனைக்கு இல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்ட இருப்போம்.

எங்களை மிரட்டப் பார்த்தார்கள். எங்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக அடிமை கட்சியல்ல. இது சுயமரியாதை கட்சி. தப்பு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தன. எனவே, அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, டாஸ்மாக் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாட்டின் நலனுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து,  அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்...
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!...
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!...
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!...
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -...
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!...
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!...
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!...
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...