Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life : ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா – படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!

Thug Life Audio Launch Update : நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு விழா குறித்துப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thug Life : ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா – படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!
தக் லைஃப் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 23 May 2025 21:59 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் கமல் ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் இந்தியன் 2 (Indian 2). இந்த படம் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத நிலையில், அதைத் தொடர்ந்து அவரின் எழுத்திலும், இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்திலும் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது நடிகர் கமல்ஹாசனின் 234வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் (Silambarasan) இணைந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு முக்கியமானதோ அதைப்போல நடிகர் சிலம்பரசனின் கதாபாத்திரமும் முக்கியம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, மே 17ம் தேதியில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா 2025, மே 24ம் தேதியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்ட நிலையில், இசை வெளியீட்டைத் தொடர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இசை வெளியிட்டு விழா எப்போது ? எங்கே ?

தக் லைஃப் பட இசை வெளியிட்டு விழாவானது சென்னையில் உள்ள  ஸ்ரீராம் கல்லூரியில் 2025, மே 24ம் தேதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரபலம் ஒருவர் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ட்ரெய்லர் சர்ச்சை குறித்து த்ரிஷா பேச்சு :

இந்த படத்தில் லீட் நாயகியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் சிம்புவிற்கு ஜோடி என ஆரம்பத்தில் ரசிகர்கள் நினைத்த நிலையில், தக் லைஃப் பட ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் கமலுடன் நெருக்கமான காட்சியில் த்ரிஷா நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் மீது ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பி வந்திருந்தனர். அதற்கு நடிகை த்ரிஷாவும் பதிலடி கொடுத்திருந்தார். அதில் அவர் தக் லைஃப் படம் வெளியான பிறகு எதுவாக இருந்தாலும் கூறுங்கள் என்று கூறியிருந்தார். இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வந்தது.

அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க
அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க...
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!...
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!...
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.....
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்...
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!...
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!...