Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!

Discover Hidden Spots : சென்னையின் மிக பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக அதன் சிறப்பம்சங்களை கவனிக்க தவறவிடுகிறோம். நம் வார இறுதியை சிறப்பாக கழிக்க சென்னைக்கு அருகிலேயே அமைதியான இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக இரவில் நட்சத்திரங்களை ரசிக்க விரும்புபவர்களுக்கு சென்னைக்கு அருகில் உள்ள 5 சிறப்பான இடங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
மாமல்லபுரம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 23 May 2025 22:34 PM

தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகரமாக சென்னையில் (Chennai) அழகிய கடற்கரைகள் (Beach),  கலாச்சார , வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன. ஆனால் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களால் அது நம் கண்களுக்கு தெரிவதில்லை. வார இறுதி நாட்களைக் கழிக்க சென்னைக்கு அருகிலேயே அமைதியான இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் குடும்பத்துடன் சென்று பரபரப்பான வாழ்க்கைக்கு சிறிது நேரம் விடுமுறை கொடுத்து நட்சத்திரங்களை ரசிக்கும் உயரமான இடங்கள் நிறை உள்ளன.  அந்த வகையில், சென்னையை சுற்றியுள்ள சில உயரமான குன்றுகள் நட்சத்திரங்களை தெளிவாகப் பார்க்கும் அரிய அனுபவத்தை தருகின்றன. இந்த கட்டுரையில் சென்னையை சுற்றியுள்ள  5 குன்றுகளைப் பார்க்கலாம்.

1. மகாபலிபுரம் ஷோர் கோயில் பகுதி

சென்னையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாபலிபுரம், அதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இது காணப்படுகிறது. இது பாறைகளால் சூழப்பட்ட பகுதி என்பதால் இரவு நேரங்களில் குறைந்த மின்விளக்குகளால், நட்சத்திரங்களை தெளிவாக காண முடியும். குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் விடுமுறையில் சென்று வர சிறந்த இடம்.

2. முத்துகாடு பின்நீர் பகுதி

கிழக்கு கடற்கரை சாலையில்  அமைந்துள்ள முட்டுகாடு அமைதியான சூழலால் சென்னை மக்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இருக்கிறது. இரவு நேரங்களில் இங்கு மின் விளக்குகள் குறைவாகவே இருக்கும் என்பதால் நட்சத்திரங்களை ரசிக்கலாம். குறிப்பாக இங்கே நீரில் நட்சத்திரங்களை பிரதிபலிக்கும் காட்சிகளை பார்ப்பது அலாதியானது.   சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், வார இறுதியில் சிறிய பயணமாக சென்று வரலாம்.

3. கோவளம் பீச் கிளிப்கள்

கோவளம் கடற்கரையில் உள்ள பாறைகள், உயரமான இடத்திலிருந்து கடலையும் வானத்தையும் தெளிவாக காணும் சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக குளிர்காலங்களில் காற்றின் தரம் நன்றாக இருக்கும் என்பதால் தெளிவாக இங்கு நட்சத்திரங்களை பார்க்கலாம்.  இங்கு சிலு சிலுவென அடிக்கும் கடல் காற்றும்,  நட்சத்திர அனுபவமும் இணைந்து ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.

4. பழவேற்காடு ஏரி

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர்த்தொட்டியாகும். இங்கு அமைந்துள்ள பறவைகள் காப்பகம், நகரின் வெளியே அமைந்துள்ளதால் காற்று மாசுபாடு குறைவாக இருக்கும். இங்கு கூடும் பறவைகளை காணவும், நட்சத்திரங்களை தெளிவாக பார்ப்பதும் அலாதியானது.

5. மெரினா பீச்

சென்னையின் முக்கியமான கடற்கரை மெரீனா பீச்சின் வடக்குப் பகுதியிலுள்ள இயற்கையாக உருவான சின்ன சின்ன மணல் மேடுகள் பொதுவாக அறியப்படாத இடங்களில் ஒன்று. இங்கு அமைந்துள்ள பாறைகள் மற்றும் மணல் மேடுகளின் மேல் அமர்ந்து நட்சத்திரங்களை காண்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

சென்னையை சுற்றியுள்ள மகாபலிபுரம் முதல் பழவேற்காடு ஏரி வரை இவை ஒவ்வொன்றும் அமைதியான சூழலும் தனித்துவமான பாறைகளும் இரவில் நட்ச்சத்திரங்களை ரசிக்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் . மேலும் சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் பயணம் செலவும் குறைவு. மேலும் சில மணி நேரங்களிலேயே வீடு திரும்பலாம் என்பதால் நல்ல சாய்ஸாக பார்க்கப்படுகிறது

அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க
அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க...
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!...
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!...
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.....
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்...
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!...
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!...