Tourist Family : உலக அளவில் ரூ.75 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் பேமிலி’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Tourist Family Box Office Collection : தமிழ் சினிமாவில் கடந்த 2025 மே 1ம் தேதியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த முதல் படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 75 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பில் சமீபத்தில் வெளியான சிறிய பட்ஜெட் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family ). இந்த படத்தை அறிமுக இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கியிருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் (Simran) நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தின் மூலம் ஹீரோயினியாக எண்டரி கொடுத்தார். இந்த படமானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ரிலீஸை தொடர்ந்து, திரையரங்குகளில் வெளியானது.
ரெட்ரோ படத்துடன் மோதும் காரணத்தால் இந்த படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்று திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த படமானது வெளியாகி 3 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், படக்குழு உலகளாவிய வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ 75 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
டூரிஸ்ட் பேமிலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
#TouristFamily Hits 75+ CRORES WORLDWIDE GROSS 💥💥
Overwhelmed with love ❤️
Thank you for making our wholesome family entertainer a worldwide success.Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶@sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03… pic.twitter.com/D8IT1vIL31— Million Dollar Studios (@MillionOffl) May 23, 2025
டூரிஸ்ட் பேமிலி படத்தின் கதைக்களம் :
இந்தப் படத்தின் கதைக்களமானது ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, அங்கிருக்கும் விலைவாசிகள் மற்றும் பிரச்னையின் காரணமாக, அனுமதி இல்லாமல் தமிழகத்தில் தஞ்சம் அடைகிறது. அந்த குடும்பத்தைப் பார்த்த போலீஸ் ஒருவர் அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறார். பின் ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அந்த குடும்பமானது சென்னையில் சாதாரண குடும்பம் போல வாழ்கின்றனர்.
அவர்கள் அந்த போலீசிடம் சிக்கினார்களா? அல்லது சாதாரண மக்கள் போலச் சென்னையிலே இருக்கிறார்களா? என்பதுதான் இந்த படத்தின் முக்கியமான கதையாகும். இந்த படத்தில் எமோஷன், காமெடி என முற்றிலும் பீல் குட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பாகுபலி இயக்குநர் ராஜமௌலி வரை பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
டூரிஸ்ட் பேமிலியின் நடிகர்கள் :
இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். அவருடன் நடிகர் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.