Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Soori: இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!

Sooris Appeal To Fans : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூரி. இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக மாமன் படம் வெளியானது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, படம் இணையத்தில் லீக்கானது குறித்து, சூரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவை குறித்து பார்க்கலாம்.

Soori: இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
நடிகர் சூரி Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 24 May 2025 13:03 PM

கோலிவுட் சினிமாவில், கடந்த 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான படம் மாமன் (Maaman).  இந்த படத்தில் நடிகர் சூரி (Soori) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தினை விலங்கு என்ற வெப் தொடரை இயக்கி மிகவும் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார். இந்த படத்துடன் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்  மற்றும் யோகி பாபுவின் ஒரு படமும் வெளியானது. இந்த படங்களை விடவும் சூரியின் மாமன் படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் லப்பர் பந்து படப் பிரபல நடிகை ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அக்கா,  தம்பி எமோஷனல் கதைக்களத்துடன் இந்த படமானது மிகவும் அருமையாக இருந்ததாக பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த படம் வெளியாகி இன்னும் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இணையத்தில் மாமன் படத்தின் தியேட்டர் பிரிண்ட் லீக் ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து , நடிகர் சூரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாமல், திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, படத்தை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள் கொடுங்கள்” என்று நடிகர் சூரி அந்த பதிவில் எழுதியுள்ளார். தற்போது அவர் கூடியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இணையத்தில் வைரலாக இந்த பதிவில், நடிகர் சூரி, “திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கும் மட்டுமல்ல , அதில் பலரை உழைப்புகள் மற்றும் கனவுகள் உள்ளடங்கியுள்ளது. நான் இந்த வேண்டுகோளை எனது படத்திற்கு மட்டும் கூறவில்லை, அனைத்து படங்களுக்காகவும்தான் கூறுகிறேன். ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தையைப் போல, கதை, படப்பிடிப்பு, இசை மற்றும் விளம்பரங்கள் என ஒவ்வொரு விஷயங்களும் உருவாகிவருகிறது. ஒரு படம் வெற்றிபெற்றாலும், தோற்றாலும், படத்தின் பயணங்கள் மற்றும் வளர்ச்சி போன்ற வலிகள் உணர்வுகளோடு கலந்து இருக்கிறது.

இவ்வாறு உருவாகும் படங்களை உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயத்தையும் கைவிடும் செயல் ஆகும். எனது பணிவான வேண்டுகோள், படங்களை இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து பார்க்காமல், திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். மேலும் உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது என்று நடிகர் சூரி ஒட்டுமொத்த திரைப்பட ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். தற்போது இவரின் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்...
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!...
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!...
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!...
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -...
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!...
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!...
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!...
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...