Silambarasan TR: திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா? – அவரே சொன்ன பதில்!
Silambarasan Feminist Role In STR50 Movie : தமிழ் சினிமாவில் மிகவும் பிறபலமிக்க நடிகர்களால் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பிலும் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பிலும் மிகவும் பிரம்மாண்டமாக தக் லைஃப் படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிம்பு, STR 50 படத்தில் பெண்ணியம் வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து இவரின் முன்னணி முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (thug Life). இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனும் (Kamal Haasan) நடித்துள்ளார். இந்த படமானது இரண்டு நடிகர்களின் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். மேலும் அவருடன் நடிகர் கமல்ஹாசனும் இணைந்து கதையை எழுதியுள்ளார். இந்த தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் (Promotions) தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் , இயக்குநர் கேஎஸ். ரவிக்குமார் (K.S. Ravikumar) தொகுத்த நிகழ்ச்சியில் தக் லைஃப் படக்குழு கலந்துகொண்டது. அதில் நடிகர் சிலம்பரசனிடம் STR 50 படத்தின் கதாபாத்திரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் சிலம்பரசன் STR 50 (STR50) படத்தில் பெண்ணியம் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
சிலம்பரசன் கூறிய விஷயம் :
அந்த நேர்காணலில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “STR 50 படத்தின் ஷூட்டிங்கை கமல் நிறுத்தினார் என்று வெளியான தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார். அதற்குக் கமல் ஹாசன், அந்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தினால்தான் தக் லைஃப் படத்தில் அவரால் நடிக்க முடியும். அதனால்தான் நாங்கள் தியாகம் செய்துள்ளோம் என்று கமல் கூறினார். அதிக தொடர்ந்து இயக்குநர் கேஎஸ். ரவிக்குமார், சிலம்பரசனிடம் “நீங்கள் STR 50 படத்தில் பெண்ணியம் சார்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்.
அதற்கு நடிகர் சிலம்பரசன், “அந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் இந்த STR 50 படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய கே எஸ். ரவிக்குமார், கமல் ஹாசன் சார் முதல் ரஜினி, சிவாஜி போன்ற நடிகர்களும் பெண்ணியம் சார்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதைக் காரணமாக வைத்து நீங்கள் அந்த படத்தில் நடிக்க உள்ளீர்களா என்று கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்.
நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோ :
About #STR50 (Desingh Periyasamy Film)#KamalHaasan: We need STR for Thuglife, that’s why we sacrificed STR50. But now Simbu itself producing it🤝#SilambarasanTR: As I’m producing it, I can do whatever I think. I’m doing feminine role for one character🌟pic.twitter.com/1vwkS01Vma
— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2025
அதற்கு நடிகர் சிலம்பரசன், “நான் அந்த கதாபாத்திரம் தொடர்பாகக் கமல் சாரிடம் பேசினேன், அந்த ரோலை எப்படிப் பண்ணலாம், எவ்வாறு அது இருக்கும் என்று பேசினேன். எப்போது ஒரு நடிகருக்கு வித்தியாசமான ரோலில் நடிக்கும்போது அது தொடர்பான சந்தேகங்களும் இருக்குமல்லவா , அதனால் நான் நடிகர் கமல் சாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்று நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.