Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வ வளம் தான்!

2025 ஜூன் 29 அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், கும்பம் ராசிகளுக்கு செல்வ வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற நன்மைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வ வளம் தான்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 May 2025 14:34 PM

ஜோதிடத்தின் படி 9 கிரகங்கள் நம் ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்து ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது.இந்த கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் சக்தி மிக்கது. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக அமையும். அப்படியான நிலையில் நவ கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகமாக கருதப்படுகிறது. காரணம் இது செல்வத்தின் அடையாளம் என சொல்லப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும் இதன் தாக்கத்தை சில ராசிகளில் எதிர்பார்க்கலாம். அந்த வகையில் 2025, ஜூன் 29 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசிக்கும் இடம் பெயரவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

  1. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மற்றும் லட்சுமி தேவி, சனி பகவானின் சிறப்பு ஆசியும் கிடைப்பது மிகவும் பலமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சொத்துக்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
  2. கடகம்: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயச்சியால் நிறைய பணம் சம்பாதிக்கும் சூழல் உண்டாகும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தொழில் நன்றாக வளரும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கொட்டும். நீண்ட நாட்களாக வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தங்கம், வெள்ளி சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வரும். வருமானம் பல வழிகளில் பெருகும். இது அனைத்தும் ஒரே நேரத்தில் வருவது சிறப்பானதாகும்.
  3. கன்னி:  கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக செல்வம் இரட்டிப்பாகும். மேலும் நீண்ட காலமாக வசூலிக்கப்படாமல் இருந்த கடன்கள் முற்றுப்பெறும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக செல்லும். நினைத்தது போல பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை காண்பீர்கள். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கும் கலையை அறிந்திருப்பீர்கள். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.
  4. துலாம்: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வியாபார வளர்ச்சி, வருமானம் அதிகரிக்கும். இது நிதி ரீதியாக ஒன்றிணையும் காலம் என்பதால் நீங்கள் எதில் முதலீடு செய்தாலும், நல்ல வருமானம் கிடைப்பது உறுதியாகும். அதேசமயம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவுகளிடன் அன்பு பாராட்டுவீர்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
  5. கும்பம்: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வாராக்கடன்கள் வசூலிக்கப்படும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் உண்டாகும். தொழிலில் நேர்மறையான மாற்றங்கள் இருக்கும். மன அமைதி நிலவும். புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். செல்வ வளம் அதிகரிக்கும்.

(ஜோதிட நம்பிக்கையின்படி கொடுப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது) 

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்...
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!...
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!...
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!...
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -...
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!...
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!...
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!...
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...