Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம் – காரணம் என்ன?

Mass Layoffs 2025 : கடந்த 2025-ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் உள்ளிட்ட 130 நிறுவனங்களில் இருந்து 61,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி இழந்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, செலவைக் குறைக்கும் முயற்சி, மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவையே இந்த வேலையிழப்புகளுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம் – காரணம் என்ன?
பணி நீக்கம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 24 May 2025 16:35 PM

கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கம் முதல் உலக அளவில் வேலை இழப்புகள் குறித்த தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக இதுவரை 61,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டும் 6,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2023 ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய  லே ஆஃப்பாக (Lay Off) பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, வாஷிங்டனில் மட்டும் 2,000 பேர் பணி இழந்துள்ளனர். இந்த நிலையில் மேனேஜ்மென்ட் தொடர்பான வேலைகளை குறைத்து, இன்ஜினியரிங் ரோல்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டு வருகிறது என மைக்ரோசாஃப்ட் விளக்கமளித்துள்ளது.

அதிரடியாக பணி நீக்கம் செய்ய கூகுள்

கூகுள் நிறுவனம் தனது விளம்பர, விற்பனை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் சுமார் 2000 பணியாளர்களை மே, 2025 அன்று துவக்கத்தில் நீக்கியுள்ளது. இது Pixel, Android, Chrome மற்றும் Cloud ஆகிய பிரிவுகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  கடந்த 2023-ல் நடைமுறைப்படுத்திய பெரிய அளவிலான பணி நீக்கத்திற்கு பிறகான நடைபெற்ற மாபெரும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம் தனது Devices and Services பிரிவில் 100 பணி இடங்களை குறைத்துள்ளது. இதில் Alexa போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட் டீமில் இருந்தும், கிண்டில் போன்ற பிரிவுகளில் இருந்தும் பணி நீக்கம் செய்திருக்கிறது. நிறுவனத்தின் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான CrowdStrike, தனது பணியாளர்களில் 5 சதவிகிதம் பேரைக் குறைத்துள்ளது. இதன் நோக்கம், எதிர்கால வளர்ச்சிக்கான லாப நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. IBM நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி, மனிதவள துறையில் முன்பு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் செய்த வேலையை தற்போது AI (ஏஐ) மூலம் செய்து வருவதாகக் கூறியுள்ளார்.  மேலும் ஒரு பக்கம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும்,  விற்பனை துறைகளில் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏஐ காரணமாக நடைபெறும் பணி நீக்கம்?

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஏஐ (AI) டூல்கள் வளர்ச்சியடைந்திருப்பது இத்தகைய பணி நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.  தற்போது பல நிறுவனங்க , பல வேலைகளுக்கு மாற்ற ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதற்கு பணியாளர்களுக்கு அளிக்கும் சம்பளம் போன்ற செலவுகளை குறைத்து, வேலையின் செயல்திறனை அதிகரிக்கும் நோகத்துடன் இத்தகைய பணி நீக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணிநீக்கங்கள் வருத்தம் அளிக்கக்கூடியவையாக இருந்தாலும், ஒரு புதிய மாற்றத்தையும் குறிக்கின்றன. அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. நிறுவனங்களும் ஏஐ போன்ற துறைகளில் முதலீடு செய்து வருகின்றன.

 

தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு...
'ஏஸ்' திரைப்படம் வந்ததே பலருக்கு தெரியல - விஜய் சேதுபதி
'ஏஸ்' திரைப்படம் வந்ததே பலருக்கு தெரியல - விஜய் சேதுபதி...
புஜாரா, ரஹானே சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிந்ததா..?
புஜாரா, ரஹானே சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிந்ததா..?...
நடிகர் நானியின் 'ஹிட் 3' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
நடிகர் நானியின் 'ஹிட் 3' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...
யுபிஐ மூலம் பணம் அனுப்பப்போறீங்களா? புதிய விதியை தெரிஞ்சுக்கோங்க!
யுபிஐ மூலம் பணம் அனுப்பப்போறீங்களா? புதிய விதியை தெரிஞ்சுக்கோங்க!...
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. CM ஸ்டாலின் பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. CM ஸ்டாலின் பங்கேற்பு...
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்...