Hit 3 : நடிகர் நானியின் ‘ஹிட் 3’ படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
Hit 3 OTT Release Update : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் ஹிட் 3. இந்த படம் ரிலீசாகி 3 வாரங்களை கடந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது. எப்போது எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி (Nani). இவர் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான திரைப்படம் ஹிட் 3 (HIT 3). இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சைலேஷ் கொளனு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் மற்ற நடிகர்களைக் கொண்டு முதல் 2 பாகங்கள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து நானியின் நடிப்பில் ஹிட் 3 படம் வெளியானது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கேஜிஎப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்திருந்தார்.
இவரும் இப்படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது சூர்யாவின் ரெட்ரோ (Retro) படத்துடன் வெளியானது. தற்போது இந்த ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி வரும் 2025, மே 29ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் (Netflix OTT) வெளியாகவுள்ளது. இந்த தகவலானது தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நானியின் ஹிட் 3 படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
Sarkaar continues his HIT streak in the BLOCKBUSTER THIRD week 💥💥
Watch #HIT3 in cinemas today ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/T7DiAuhyZC#BoxOfficeKaSarkaar
Natural Star @NameisNani @KolanuSailesh @SrinidhiShetty7 @komaleeprasad @MickeyJMeyer @SJVarughese… pic.twitter.com/gpYCzn7hQE— Unanimous Productions (@UnanimousProds) May 17, 2025
இயக்குநர் சைலேஷ் கொளனுவின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது முழுக்க வன்முறை காட்சிகள் மற்றும், அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தது. இந்த ஹிட் 3 படமானது மனிதர்களை வித்தியாசமான முறையில் கொலை செய்யும், கொலைகார கூட்டத்தை நானி எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும். இந்த படத்தில் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் ஜோடி மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம்.
மேலும் இந்த படத்தின் இறுதியில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த ஹிட் 3 படத்தின் கடைசி காட்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஹிட் படத் தொகுப்பில் 3 படங்கள் வெளியான நிலையில், 4வது பாகத்தில் நடிகர் கார்த்தி முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கும் இந்த 2025ம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கார்த்தி ஏற்கனவே கார்த்தி29 போன்ற படங்களில் கமிட்டான நிலையில், அந்த படத்தை தொடர்ந்து இந்த ஹிட் 4 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.