Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே கட்டத்தில் தேர்வு: நேர்முகம் இல்லை: குரூப் 4 பணியிடங்களுக்கு கடைசி வாய்ப்பு

TNPSC Group 4 Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவித்துள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன. 10ம் வகுப்புத் தேர்ச்சி போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

ஒரே கட்டத்தில் தேர்வு: நேர்முகம் இல்லை: குரூப் 4 பணியிடங்களுக்கு கடைசி வாய்ப்பு
குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 24 May 2025 07:45 AM

தமிழ்நாடு மே 24: தமிழக அரசு (Government of Tamil Nadu) பல பதவிகளுக்கு 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 2025 மே 25-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் செய்யலாம். இந்த தேர்வு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும் என்பதால் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் இதில் போட்டியிடுகிறார்கள். வயது வரம்பு பதவிக்கேற்ப 18-42 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு ஒரே கட்டத்தில் நடைபெறும் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லை. தேர்வு தேதி 12-07-2025; விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் குரூப் 4 தேர்வு: 3935 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி (TNPSC – Tamil Nadu Public Service Commission) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுத் தேர்வாணையமாகும். இது மாநில அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.

தமிழக அரசில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் 25-04-2025 முதல் 24-05-2025 வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ இல் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

அதிக வரவேற்பு மற்றும் ஒரே கட்ட தேர்வு

தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளில் இது மிகவும் அதிக மக்கள் எழுதும் தேர்வாகும். ஒரே கட்ட தேர்வாக இருப்பதும், 10ஆம் வகுப்பு தகுதி போதும் என்பதாலும், லட்சக்கணக்கானோர் வருடந்தோறும் இதை எழுதுகிறார்கள். இத்தேர்வில் நேர்முகத் தேர்வு நடைபெறாது; தேர்வு முடிவுகள் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும்.

வயது வரம்பும் கல்வித்தகுதியும்

வயது வரம்பு பதவிக்கேற்ற வகையில் வித்தியாசமாக உள்ளது

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ): குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை

வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகள்: 21 முதல் 37 வயது வரை

பிற பதவிகள்: 18 முதல் 34 வயது வரை

கல்வித்தகுதி

10ஆம் வகுப்பு தேர்ச்சி பொதுவான தகுதி

இளநிலை உதவியாளராக இருக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி அவசியம்

வனக் காப்பாளருக்கு 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப வாய்ப்பு

தேர்வு 12-07-2025 அன்று நடைபெறும். விண்ணப்பங்களை திருத்துவதற்கான அவகாசம் 29-05-2025 முதல் 31-05-2025 வரை உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும் கட்-ஆஃப் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இத்தேர்வுக்கான விண்ணப்பிக்க இன்று (24-05-2025) கடைசி நாள் என்பதால், இனி வாய்ப்பு தவறவிடாதீர்கள்.

'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?...
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!...
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!...
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" துணை உதயநிதி ஸ்டாலின்
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி...
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!...
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!...
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!...
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை!...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க...
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் இதை பயன்படுத்துங்க......